Tamil News Today Live: இந்தியாவில் மேலும் 913 பேருக்கு கொரோனா பாதிப்பு

Tamil Nadu News Updates: இலங்கையில் பிரதமர் மகிந்த ராஜபக்ச தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா. புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அரசுக்கு எதிரான மக்களின் போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

பெட்ரோல் லீட்டருக்கு 0.38 காசும், டீசல் 0.38 காசும் உயர்ந்துள்ளது. அதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டர் 109.34 ரூபாய்க்கும், டீசல் 99.42 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

எய்ம்ஸ் மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்படவுள்ளது.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை நிறுத்திவைத்து மீனவர்கள் இன்று ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை ஹாட்ரிக் தோல்வி

ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை ஹாட்ரிக் தோல்வியை சந்தித்திருப்பதால், ரசிகர்கள் ஏமாற்றம்.

Live Updates
09:36 (IST) 4 Apr 2022
இந்தியாவில் மேலும் 913 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,316 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 13 பேர் உயிரிழந்தனர்.

09:04 (IST) 4 Apr 2022
விருதுநகர் பாலியல் வன்கொடுமை – விசாரணை நிறைவு

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேரின் விசாரணைக் காவல் நிறைவடைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று காலை மீண்டும் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

08:56 (IST) 4 Apr 2022
அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

08:12 (IST) 4 Apr 2022
ஆளுநரை திரும்பப் பெற திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ்

தமிழக ஆளுநர் ஆன் என் ரவியை, திரும்பப் பெறக்கோரி மக்களவையில் திமுக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸை திமுக எம்.பி டிஆர் பாலு தாக்கல் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.