இலங்கையில் நீடிக்கும் பதற்றம்; ஊரடங்கு உத்தரவை மீறி இரவிலும் போராட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட வாங்க முடியாத அளவிற்கு விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் சனிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 6 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதனைப் பொருட்படுத்தாது அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் பல பகுதிகளிலும் எதிர்ப்பு போராட்டங்களை பொதுமக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு முன்பாகவும் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பின் பல இடங்களிலும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர்.

மேலும் படிக்க | இலங்கை யாழ்ப்பாணம் மாபெரும் கண்டன பேரணியில் மோதல்.. உயிர் தப்பித்த போலீசார்

நீர்கொழும்பு, ராஜகிரிய ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதுடன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் இரவு முழுவதும் தீப்பந்தப் போராட்டம் நடத்தினர். இதனிடையே நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அமலாகிய இந்த ஊரடங்கு இன்று காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பியது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையில், முன்னதாக, நேற்று இரவு இடம்பெற்ற முக்கிய அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பதவி விலகல் கடிதங்கள், அதிகாரப்பூர்வமாக இன்று அதிபரிடம் சமர்பிக்கப்பட்ட உள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசு, நட்பு நாடுகளின் உதவியை நாடியுள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள், மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை ஆகியவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

மேலும் படிக்க | கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.