எங்கள விட்டுட்டு போகாத அண்ணே ப்ளீஸ்… இணையத்தை கலக்கும் ‘கொரோனா bye bye’ மீம்ஸ்!

Corona bye bye’ tamil memes: இந்தியாவை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பரவல் நாடு முழுதும் தற்போது குறைந்து வருகிறது. இதனிடையே, கடந்த 31ம் தேதியுடன் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான முடிவுகளை அந்தந்த மாநிலங்களே எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிப்பையும் வெளியிட்டிருந்தது.

இதையடுத்து, கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த மாநிலங்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்தன. மாஸ்க், சானிடைசர் போன்ற அடிப்படை விஷயங்களை மக்களே பின்பற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்தது. மேலும், முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளி ஆகியவற்றை பொதுமக்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்றவேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் கட்டாயமல்ல. சுய விருப்பத்தின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் ‘கொரோனா bye bye’ என்று கூறி சுவையான மீம்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

‘கொரோனா bye bye’ வைரல் மீம்ஸ்:

இனி தடுப்பூசி, மாஸ்க், சானிடைசர் அனைத்தும் கட்டாயம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், இது குறித்து மக்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தொடர்பு படுத்தும் விதமாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

வெயில் மீம்ஸ்:

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

விலைவாசி அதிகமா இருக்கு மீம்ஸ்:

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அதிக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தொடர்படுத்தும் விதமாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.