விற்பனைக்கு வந்த போக்கோ சூப்பர் போன் – விலை மற்றும் அம்சங்கள்!

உலகின் மிகப்பெரிய டெக் MWC 2022 நிகழ்வில், Poco X4 Pro 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய பயனர்களுக்காக சில தினங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஸ்மார்ட்போனின் விற்பனையை Flipkart ஷாப்பிங் தளத்தில் நிறுவனம் தொடங்கியுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் 120Hz ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் கொண்ட சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்ட டிரிப்பிள் கேமரா, Superfast 67W Sonic Charging, 5000 mAh பேட்டரி போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி அம்சங்கள் (poco x4 pro 5g specs)

புதிய போக்கோ போனில் 6.67″ அங்குல Super AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட இந்த டிஸ்ப்ளே, 120Hz ரெப்ரெஷ் ரேட்டை ஆதரிக்கிறது. 360Hz வரை டச் சேம்பிளிங் ரேட்டும் இதில் உள்ளது.

மலிவான பெட்ரோல்-டீசல் எங்கே கிடைக்கும்?

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான MIUI 13 for POCO ஸ்கின் உடன் இயங்குகிறது. 5ஜி ஆதரவைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்,
Qualcomm Snapdragon 695
5G சிப்செட் கொண்டு இயக்கப்படுகிறது. கிராபிக்ஸ் செயல்பாடுகளுக்கு அட்ரினோ 619 எஞ்சின் உதவுகிறது.

கேமராவைப் பொருத்தவரை, 64MP மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/1.9 அபெர்ச்சரில் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் 8MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ், எப்போதும் போல 2MP மேக்ரோ சென்சார் ஆகியவை பின்பக்க கேமரா அமைப்பில் அடங்கி உள்ளது. செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 16MP மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளது.

போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி விலை (Poco X4 Pro 5G price in india)

புதிய போக்கோ போனில் 6ஜிபி, 8ஜிபி LPDDR4X ரேம் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரிக்காக 64ஜிபி, 128ஜிபி UFS2.2 வழங்கப்பட்டுள்ளது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது. 5000mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போனை ஊக்குவிப்பதற்காக Superfast 67W Sonic சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இனி சிம் கார்டு தேவையில்லை – Android 13 கொண்டுவரும் புதிய அம்சம்!

லேசர் ப்ளூ, லேசர் பிளாக், போக்கோ யெல்லோ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்துள்ளது. போக்கோ எக்ஸ் 4 5ஜி ஸ்மார்ட்போனின் எடை 205 கிராமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 6GB + 64GB வேரியண்ட் ரூ.18,999 ஆகவும், 6GB + 128GB வேரியண்ட் ரூ.19,999 ஆகவும், 8GB + 128GB வேரியண்ட் ரூ.21,999 ஆகவும் விற்பனைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

புதிய போக்கோ எக்ஸ் 4 ப்ரோ 5ஜி போனின் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. Flipkart ஷாப்பிங் தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இதன் விற்பனை தினமான இன்று பயனர்கள் கூடுதல் தள்ளுபடிகளுடன் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும். மேலும், பழைய போன்களுக்கு சிறந்த Exchange value கொடுக்கப்படுகிறது. கூடுதல் சிறப்பம்சங்கள் உடன் சிறந்த விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகி இருப்பது போக்கோ விரும்பிகளை குதூகலப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் குறித்த உங்கள் பதிவுகளை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் பதிவிடவும்

மேலும் தகவல்களுக்கு:
Poco X4 Pro 5g: சும்மா மாஸ் காட்டும் Poco X4 Pro 5G போன் – ஒரு குறையும் இல்லங்க!

அடுத்த செய்திபிற செயலிகளை வலுவிழக்கச் செய்கிறதா சியோமி – காரணம் என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.