இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது.. மத்திய அரசு உறுதி..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த நிதியாண்டில் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட முடியாமல் போனது. மார்ச் மாத இறுதிக்குள் எப்படியாவது வெளியிட வேண்டும் நடப்பு கணக்கு பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என்பதில் குறியாய் இருந்தது.

ஆனால் ரஷ்யா – உக்ரைன் போர் சர்வதேச சந்தையில் ஏற்படுத்திய தாக்கம் மத்திய அரசின் கனவு திட்டமான எல்ஐசி ஐபிஓ ஒத்தி வைக்கப்பட்டது. இது மத்திய அரசுக்கு மட்டும் அல்லாமல் பல லட்சம் ரீடைல் முதலீட்டாளர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் மத்திய அரசு மீண்டும் எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ வெளியிடுவதற்காகப் பணிகளை வேகப்படுத்தியுள்ளது. எப்போது தெரியுமா..?!

கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் ஷாக்.. ஜூலை 1 முதல் 1% TDS வரி விதிப்பு.. மத்திய அரசு அறிவிப்பு..!

எல்ஐசி ஆதிக்கம்

எல்ஐசி ஆதிக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, இந்தியாவின் ஒட்டுமொத்த காப்பீட்டுச் சந்தையில் சுமார் 90 சதவீத வர்த்தகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காரணத்தால் இதன் ஆதிக்கம் மிகவும் அதிகம். இந்த நிலையில் தான் இந்நிறுவனத்தின் ஐபிஓ-விற்கு இந்திய முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் காத்திருக்கின்றனர்.

எல்ஐசி ஐபிஓ

எல்ஐசி ஐபிஓ

மத்திய அரசு மே மாத துவக்கத்தில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான பணிகளைத் தீவிரமாகச் செய்து வருவதாகவும், இதற்காகச் செபி அமைப்பிடம் அப்டேட் செய்யப்பட்ட ஐபிஓ அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகவும் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் கூறுகிறது.

5 சதவீத பங்குகள் விற்பனை
 

5 சதவீத பங்குகள் விற்பனை

செபியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எல்ஐசி பங்குகளில் 5 சதவீத பங்குகளை மட்டும் விற்பனை செய்து சுமார் 50000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்ட உள்ளதாகத் தெரிகிறது. இந்த ஐபிஓ-வில் எல்ஐசி பாலிசிதாரர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடி கிடைக்குமா என்பது முக்கியக் கேள்வியாக உள்ளது.

 செபி

செபி

செபி ஏற்கனவே மே 12ஆம் தேதிக்குள் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட தொகையின் ஐபிஓ வெளியிட அனுமதி அளித்துள்ளது. இதனால் மத்திய அரசு மே 12ஆம் தேதிக்குள் ஐபிஓ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஓ மத்திய அரசு 31 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Modi Government plans to launch LIC IPO in May, This time target wont miss

Modi Government plans to launch LIC IPO in May, This time target won’t miss இந்த முறை டார்கெட் மிஸ் ஆகாது.. மத்திய அரசு உறுதி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.