120W சார்ஜர்; மூன்று 50MP கேமரா – மிரட்ட வரும் சியோமி 12 ப்ரோ 5ஜி!

சீன நிறுவனமான சியோமி, விரைவில் தனது புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஏற்கனவே சந்தையில் இருக்கும் Flagship ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. வெளியாகும்
சியோமி 12 ப்ரோ 5ஜி
ஸ்மார்ட்போன் பிரீமியம் அம்சங்களைக் கொண்டிருக்கும் என நிறுவனம் டீஸ் செய்துள்ளது.

முதலில், தனது ட்விட்டர் பக்கத்தில் டீஸ் செய்திருந்த நிறுவனம், தற்போது அமேசான் இந்தியா பக்கத்தில் புதிய டீசரை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட நோட் 10 சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நேரத்தில் புதிய Mi Pad 5 டேப்லெட்டையும் இந்தியாவில் வெளியிட நிறுவனம் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

கார்ல் சீஸ் லென்ஸுடன் வெளியான புகைப்படங்கள் – Vivo X Note லீக்ஸ்!

சியோமி 12 ப்ரோ 5ஜி அம்சங்கள் (Xiaomi 12 Pro 5G Specifications)

புதிய சியோமி ஸ்மார்ட்போனில் 6.73″ இன்ச் WQHD+ (1,440×3,200 pixels) E5 AMOLED டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே குறைந்த வெப்பம் கொண்ட polycrystalline oxide backplane தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், 120Hz ரெப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட் ஆகிய ஆதரவையும் இந்த டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது 1500 nits வரை பீக் பிரைட்னஸை ஆதரிக்கிறது.

சியோமி 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் பிளாக்‌ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் (
Qualcomm Snapdragon
8 Gen 1 SoC) நிறுவப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான MIUI 13 ஸ்கின் மூலம் இயங்குகிறது.

கேமராவைப் பொருத்தவரை பின்பக்கம் முதன்மை சென்சாராக Sony IMX707 கொண்ட 50MP மெகாபிக்சல் OIS கேமரா, 50MP மெகாபிக்சல் அல்ட்ரா வைட் சென்சார், 50MP மெகாபிக்சல் போட்ரெய்ட் சென்சார் ஆகியவை கொண்ட டிரிப்பிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

சியோமி 12 ப்ரோ எதிர்பார்க்கப்படும் விலை (Xiaomi 12 Pro expected Price in India)

வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக், NFC ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது. அதிரடி ஒலித் திறனுக்காக Harmon Kardon உடன் டால்பி அட்மாஸ் சவுண்ட் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 4,600mAh திறன் கொண்ட பேட்டரி, அதனை ஊக்குவிப்பதற்காக Superfast 120W Sonic சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. LPDDR5 ரேம் ஆதரவு, UFS 3.0 ஸ்டோரேஜ் மெமரியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும்.

குண்டை தடுத்த நிறுத்திய ஹெட்போன் – நம்பமுடிகிறதா!

8GB+128GB வேரியண்டின் விலை ரூ.49,999ஆகவும், 8GB+256GB வேரியண்டின் விலை ரூ.52,999ஆகவும், 12GB+256GB வேரியண்டின் விலை ரூ.56,999ஆகவும் இந்திய மதிப்பில் விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Xiaomi India மற்றும் Amazon India ஆகிய ஆன்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதன் வெளியீடு குறித்து நிறுவனம் இதுவரை தகவல் வெளியிடவில்லை என்றாலும், இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியீட்டு நிகழ்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்திஎன்ன ஆச்சு சோமேட்டோ! ஆர்டர் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.