நவம்பர் 15 – 22ந்தேதிவரை பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம்! சட்டப்பேரவையில் தகவல்..

சென்னை: பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. முன்னதாக பள்ளிக் கல்வித் துறை கொள்கை விளக்க குறிப்பு வெளியிடப்பட்டது அதில் கூறப்பட்டுள்ளதாவது,

  • பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து சேவைகளும் கணினி மயமாக்க நடவடிக்கை.
  • போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தவும் கையேடு தயாரித்து வழங்கப்படும்.
  • மாணவர்கள் தங்கள் புகார் மற்றும் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும் .
  • அனைத்து பள்ளிகளிலும் பள்ளிச் சிறார்கள் பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரமாக ஆண்டுதோறும் நவம்பர் 15 – 22ம் நாள் வரை கடைபிடிக்கப்படும்
  • மாணவர்களுக்கு பள்ளிகளில் பாதுகாப்பாக கல்வி கற்கும் சூழலை வழங்குவதற்கு பள்ளிக்கல்வித் துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
  • குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கவும் மாணவர்கள் பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • அனைத்து பள்ளி நூலகங்களிலும் என்னென்ன புத்தகங்கள் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள EMIS இணையத்தளம் மூலம் தனி செயலி உருவாக்கப்படும்
  • பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பான பணிச் சூழலை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும், அலுவலகத்திலும் பெண்களைத் தலைமையாகக் கொண்டு (பாலியல் சாராத துன்புறுத்தல்களை பற்றிய புகார்களை கையாள்வதற்காக) (உயர்மட்ட குழுவும், மாவட்ட அளவிலான குழுவும் அமைக்கப்பட்டு அவ்விடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், அவ்வப்போது எழும் பிரச்சினைகளை சரியாக கையாண்டு அவற்றிற்கான விசாரணை அறிக்கைகளை 10 நாட்களுக்குள் கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.