இந்தியாவில் அறிமுகமானது ஒப்போ F21 புரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்

நியூ டெல்லி: ஒப்போ நிறுவனம் இந்தியாவில் இன்று அதன் ‘F’ சீரிஸ் போன் வரிசையில் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. F21 புரோ 5ஜி மற்றும் 4ஜி போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.

ஆன்லைன் மூலம் நடைபெற்ற நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதோடு ஒப்போ என்கோ ஏர் 2 புரோ இயர்பட்ஸும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிட்-ரேன்ஜ் விலையில் இந்த போன்கள் அறிமுகமாகியுள்ளன. வரும் 27-ஆம் தேதி வரையில் சிறப்பு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரையும் அறிவித்துள்ளது ஒப்போ. இருந்தாலும் அதற்கு சில நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

F21 புரோ 5ஜி மற்றும் 4ஜி சிறப்பம்சங்கள்

F21 புரோ 5ஜி போனில் 6.43 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 695 புராஸசர், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ். 4500mAh பேட்டரி, 33 வாட்ஸ் சார்ஜிங் வசதி, டைப் ‘சி’ போர்ட், பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் AI அம்சத்தை கொண்டுள்ளது 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா. 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்பக்கத்தில் எல்.இ.டி நோட்டிபிகேஷன் அலர்ட் மாதிரியான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. 5ஜி போனின் விலை 26,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அசல் விலையில் இருந்து 15 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்ட விலை என தெரிகிறது.

5ஜி போனுடன் ஒப்பிடுகையில் F21 புரோ 4ஜி போனில் புராஸசர் மட்டுமே வேறுபடுகிறது. இந்த போன் ஸ்னாப்டிராகன் 680 புராஸசரை கொண்டுள்ளது. இதன் விலை 22,999 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்த போன்களுக்கு முன்பதிவு தொடங்கியது. ஒப்போ நிறுவனத்தின் வலைதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

இந்த போனுடன் வெளிவந்துள்ள என்கோ ஏர் 2 புரோ இயர்பட்ஸின் விலை 3,499 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ஆம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வருகிறது.

Oppo India (@OPPOIndia) April 12, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.