Tamil New Year 2022 wishes: தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்ல இதோ அழகான புகைப்படங்கள்… அற்புதமான வாசகங்கள்…

Happy Tamil New Year 2022 Wishes Images Quotes: தமிழ் புத்தாண்டு சித்திரைத் திருநாள் தமிழக மக்களால் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு நாளில் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உங்களுடைய சிறப்பான புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்க தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அழகான, அற்புதமான வாழ்த்துச் செய்தி புகைப்படங்களை இங்கே தருகிறது.

தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா அல்லது தை முதல் நாளா என்ற விவாதங்கள் இருந்தாலும் தமிழ் புத்தாண்டு எப்போது வந்தாலும் தமிழ் பேசும் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடத் தவற மாட்டார்கள். இந்த ஆண்டு சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் தமிழ் பேசும் மக்களால் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது.

சூரியனை மையமாகக்கொண்ட நாட்காட்டிப்படி, சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டுப்படி, சூரியன் பூமத்திய ரேகைக்கு மேல் இருக்கும் போது தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழ் புத்தாண்டு நாளில், தங்கள் வீட்டு வாசலில் அழகழகான அரிசி மாக்கோலமிட்டு கொண்டாட்டத்தை தொடங்குகிறார்கள். அனைவரும் தமிழ் புத்தாண்டு நாளில் எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று அவரவர் கடவுளை வழிபடுகின்றனர். மேலும், தமிழ் புத்தாண்டு நாளில் நண்பர்கள், உறவினர்கள், இளையவர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

தகவல் தொடர்பு யுகத்தில் அனைவரும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை செல்போன் வழியாக உடனடியாக பகிர்ந்துகொள்கின்றனர். தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க, உங்களுக்காகவே அழகழகான புகைப்படங்கள், நம்பிக்கை அளிக்கும் அற்புதமான வாழ்த்து வாசகங்கள், போஸ்டர்கள், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இங்கே தருகிறது. அவற்றை உங்கள் நண்பர்கள் , உறவினர்கள், அன்பானவர்களுக்கு அனுப்பி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவியுங்கள்.

*இந்த புத்தாண்டு உங்கள் கவலைகள் அனைத்தையும் போக்கட்டும். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் ஆரோக்கியமான வளமான வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • புத்தாண்டு வாழ்த்துக்கள்! எனது நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
  • இந்த புத்தாண்டு நாளில், அனைவருக்கும் மகிழ்ச்சியான வளமான தெய்வீக ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்!
  • இந்த நாளை உற்சாகத்துடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுங்கள், இது புத்தாண்டை வரவேற்கும் நேரம்.
  • இனிய தமிழ் புத்தாண்டு 2022 நல்வாழ்த்துக்கள்: இந்த ஆண்டு நீங்கள் கனவு காணும், விரும்பும் அனைத்தும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.