Vijay:இதென்னய்யா விஜய்க்கு வந்த சோதனை: பயங்கர அதிர்ச்சி வீடியோ

நெல்சன் திலீப்குமார்
இயக்கத்தில்
விஜய்
, பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்த
பீஸ்ட்
படம் நேற்று தியேட்டர்களில் வெளியானது.

படத்தை பார்த்த விஜய் ரசிகர்களே அதிருப்தி அடைந்து நெல்சனை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். நெல்சன் ரசிகர்களோ, தேவையில்லாமல் விஜய்யை வைத்து ஏன் படம் எடுத்து பெயரை கெடுத்துக் கொண்டீர்கள்.

அவர் பெரிய மாஸ் ஹீரோ, உங்களால் அவர் அளவுக்கு கதை எழுத முடியாது என்கிறார்கள்.

விஜய் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியும் பலனில்லாமல் போய்விட்டது. சமூக வலைதளங்களில் பீஸ்ட் படத்தை பங்கம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் விருதுநகரில் இருக்கும் அமிர்தராஜ் தியேட்டரில் விஜய் ரசிகர்களுக்காக நேற்று காலை 7 மணிக்கு பீஸ்ட் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆனால் தியேட்டரில் ஒரு சில ரசிகர்கள் மட்டுமே படம் பார்த்தார்கள்.

ரசிகர்களின் சிறப்புக் காட்சிக்கே தியேட்டர் காத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

கே.ஜி.எஃப். 2 விமர்சனம்

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் யஷின் கே.ஜி.எஃப். 2 படம் தீயாக இருக்கிறது. படம் பார்த்த அனைவரும் ஆஹா, ஓஹோ என்று பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். வார இறுதி நாட்களில் பீஸ்ட் பார்க்க திட்டமிட்டவர்களின் கவனம் கே.ஜி.எஃப். 2 மீது சென்றுவிட்டது.

இதற்கிடையே பீஸ்ட் படத்தை ஆன்லைனில் கசியவிட்டுவிட்டது தமிழ் ராக்கர்ஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.