எல்ஐசி முதலீடு செய்த முத்தான 40 பங்குகள்.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, இன்சூரன்ஸ் நிறுவனம் என்பதோடு மட்டும் அல்லாமல், சிறந்த முதலீட்டாளரும் கூட.

எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்கு வெளியீடு குறித்து மிக ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் இந்த சமயத்தில், எல்ஐசி நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் பிஎஸ்இ 500 குறியீட்டில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தனது முதலீட்டினை அதிகரித்துள்ளதாக பங்கு சந்தை தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

ஜனவர் – மார்ச் காலாண்டில் பிஎஸ்இ சென்செக்ஸ் 0.54% அதிகரித்துள்ளது. இந்த காலாண்டில் சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருந்தது என்றே கூறலாம்.

ரஷ்யா உக்ரைன் பிரச்சனை.. இந்தியா சந்தித்து வரும் சவால்கள்.. வளர்ச்சி கணிப்பை குறைத்த IMF!

 அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்

இது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அதிகரித்து வரும் பணவீக்கத்தினால், சந்தையில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறின. எனினும் அந்த சமயத்தில் உள்நாட்டு முதலீட்டாளர்களின் முதலீடானது அதிகளவில் இருந்த நிலையில், இது பெரும் சரிவினை தடுத்தது. குறிப்பாக கடந்த 2022ம் நிதியாண்டிலேயே கடைசி காலாண்டில் தான் அதிக ஏற்ற இறக்கம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிபிசிஎல் & ஐசிஐசிஐ வங்கி

பிபிசிஎல் & ஐசிஐசிஐ வங்கி

இதற்கிடையில் எல்ஐசி நிறுவனம், எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் 4.78%ல் இருந்து, தனது முதலீட்டினை 7.46% ஆக உயர்த்தியது. இதே வங்கித் துறையை சேர்ந்த ஐசிஐசிஐ வங்கியில் 7.77%ல் இருந்து 7.92% ஆகவும் உயர்த்தியுள்ளது. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 5.34%ல் இருந்து 5.63% ஆகவும் அதிகரித்துள்ளது.

முதலீடுகள் அதிகரிப்பு
 

முதலீடுகள் அதிகரிப்பு

இது தவிர கேப்ரி குளோபல் கேபிடல், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ், பிரிட்டானியா, ஸ்ரீ சிமெண்ட், பிஎல் இண்டஸ்ட்ரீஸ், தனுகா அக்ரிடெக், க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ், ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ், சிஇஎஸ்சி, அதானி எண்டர்பிரைசஸ், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், தி ராம்கோ சிமெண்ட், கன்சாய் நெரோலேக் பெயிண்ட்ஸ், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட நிறுவனங்களிலும் முதலீட்டினை அதிகரித்துள்ளது.

லிஸ்டில் இதுவும் அடங்கும்

லிஸ்டில் இதுவும் அடங்கும்

இது தவிர பிடிலைட் இண்டஸ்ட்ரீஸ், பால்கிருஷ்ணா இண்டஸ்ட்ரீஸ், பைசர், டிவிஸ் லேப்ஸ், இன்ஃபோ எட்ஜ், அதானி டிரான்ஸ்மிஷன், ஹெச் யு எல், ஸ்ரீ ராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், தீபக் நைட்ரேட் டாக்டர் லால் பாத்லேப்ஸ், ஆஸ்டிரால், டாடா கம்யூனிகேஷன்ஸ், பி & ஜி ஹைஜினீன், அரபிந்தோ பார்மா, ஜேஎஸ்டபள்யூ ஸ்டீல், விப்ரோ, பிசிபிஎல்,எண்டூரன்ஸ் டெக்னாலஜி, எஸ்பிஐ கார்டு, டிசிஎஸ், வேதாந்தா, பயோகான், சனோஃபி மற்றும் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ், மைண்ட்ட்ரீ உள்ளிட்ட பங்குகளும் லிஸ்டில் அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC increased stake in over 40 firms in the march quarter

LIC increased stake in over 40 firms in the march quarter/எல்ஐசி முதலீடு செய்த முத்தான 40 பங்குகள்.. நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

Story first published: Wednesday, April 20, 2022, 17:41 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.