டெல்லி அணியின் கீப்பருக்கும் கொரோனா.. போட்டி நடப்பதில் சந்தேகம் !!

டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐபிஎல் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

15ஆவது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் சுற்று சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்து அனைத்து அணிகளும் இரண்டாவது சுற்றில் விளையாட தயாராகி வருகின்றனர். கொரோனா காரணமாக மும்பை, நவி மும்பை, புனே ஆகிய மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

 mitcel marsh
எனினும், டெல்லி அணியில், அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவது ரசிகர்கள் மற்றும் வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி, அந்த அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹார்ட்டுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை எடுத்தபோது நெகட்டிவ் என வந்ததால், கடந்த 16ஆம் தேதி பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில் அந்த அணி பங்கேற்றது.

மேலும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான மிட்சல் மார்ஷ்-க்கு பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, ஐபிஎல் நிர்வாகம் வழிகாட்டுதல்களின்படி ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் டெல்லி அணியின் மருத்துவர், அந்த அணியின் சோஷியல் மீடியா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

mitcel marsh

இதனையடுத்து மிட்செல் மார்ஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அணி வீரர்கள் மும்பை புரோபோர்ன் மைதானத்திற்கு போட்டி மாற்றப்பட்டு இன்று பஞ்சாப் அணிக்கு எதிராக அந்த அணி களமிறங்க இருந்தது.

இந்நிலையில், டெல்லி அணியில் மேலும் ஒரு வெளிநாட்டு வீரருக்கு கொரோனா உறுதி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிம் சீஃபர்ட்டுக்கு ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளநிலையில், ஆர்டி-பிசிஆர் சோதனை முடிவுக்கு அந்த அணி காத்துள்ளது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய போட்டி என்னவாகும் என முடிவாகவில்லை.

mitcel marsh

இங்கு ஒரு குறிப்பிடத்தகுந்த விஷயம் கூறவேண்டும். கடந்த ஆண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய நியூசிலாந்து வீரரான டிம் சீஃபர்டுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு சென்னை மருத்துமனையில் சிகிச்சை பெற்றார்.  

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.