சிறைப்பிடித்த உக்ரைனியர்களை கட்டாயப்படுத்தி பயங்கர தீவு ஒன்றிற்கு அனுப்பி வைத்துள்ள புடின்: அவரது நோக்கம்?


ரஷ்யா சுமார் 500,000 உக்ரைனியர்களை கட்டாயத்தின் பேரில் ரஷ்யாவின் ஒரு தொலைதூர மூலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிரந்தர பிரதிநிதியாகிய Sergiy Kyslytsya என்பவர், 121,000 சிறுபிள்ளைகள் உட்பட, சுமார் 500,000 உக்ரைனியர்களை ரஷ்யா கட்டாயத்தின் பேரில் ரஷ்யாவுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அப்படி உக்ரைனியர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்று Sakhalin என்னும் தீவு ஆகும். தனியாக, பிரம்மாண்ட சிறை போலக் காட்சியளிக்கும் அந்தத் தீவில் குளிர்காலம் கடுமையானதாக இருக்குமாம்.

அங்கிருந்து தப்புவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என கூறப்படுகிறது. தீவுக்குக் கொண்டு வரப்படும் உக்ரைனியர்கள் அங்கிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வெளியேற இயலாத வகையில் அவர்களுக்கு ஆவணங்கள் கையளிக்கப்படுகின்றனவாம்.

அங்கிருந்து தப்புவது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை என கூறப்படுகிறது. தீவுக்குக் கொண்டு வரப்படும் உக்ரைனியர்கள் அங்கிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு வெளியேற இயலாத வகையில் அவர்களுக்கு ஆவணங்கள் கையளிக்கப்படுகின்றனவாம்.

இன்னொரு மோசமான செய்தி என்னவென்றால், அந்தத் தீவுக்கு வரும் உக்ரைனியர்களை வேலை செய்ய வைப்பதுடன், அவர்களை ரஷ்யர்களாக ஆக்குவதே புடினுடைய நோக்கமாம்.

தாங்கள் உக்ரைனியர்கள் என்ற எண்ணமே அவர்கள் மனதில் இல்லாத வகையில் அவர்களை மாற்றுவதே புடினுடைய இலக்கு என ரஷ்ய தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒருவர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.