பிரியா பவானி ஷங்கர் – அசோக் செல்வனின் ‘ஹாஸ்டல்’ டிரெய்லர் வெளியானது

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் இருவரும் நடிக்கும் ஹாஸ்டல் திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு போபோ சசில் இசையமைத்திருக்கிறார், ஒளிப்பதிவு அப்சர்.

சதிஷ், ‘கலக்கப் போவது யாரு’ யோகி, ரவி மரியா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மலையாளத்தில் வெளியான ‘அடி கேப்யாரே கூட்டமணி’ என்ற படத்தின் ரீ-மேக்கான இந்தப் படம் வரும் 28ம் தேதி திரைக்கு வருகிறது.

ஆண்கள் கல்லூரி விடுதியில் பெண் ஒருவர் நுழைந்தால் என்னவாகும் என்பதுதான் இந்தப் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.