தங்கம் விலை இன்றும் குறைந்திருக்கா.. தற்போதைய நிலவரம் என்ன.. இனியும் குறையுமா?

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று பெரியளவில் மாற்றமின்றி சற்று தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. கடந்த அமர்வில் தங்கம் விலையானது காலை அமர்வில் பலத்த சரிவினைக் கண்டிருந்தாலும், மாலை அமர்வில் மீண்டும் ஏற்றம் கண்டது. இன்றும் அப்படி இருக்குமா?

கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? சர்வதேச சந்தையில் தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன?

கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன? முக்கிய லெவல்கள் என்னென்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தங்கம் விலை சரியலாம்.. அடுத்த முக்கிய லெவல் என்ன.. நிபுணர்களின் பலே கணிப்பு..!

தடுமாற்றத்தில் தங்கம்?

தடுமாற்றத்தில் தங்கம்?

தங்கம் விலையானது தற்போது பெரியளவில் மாற்றமின்றி சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. இது அமெரிக்காவின் பத்திர சந்தை, டாலரின் மதிப்புக்கு இடையில், சற்று தடுமாற்றத்திலேயே காணப்படுகின்றது. எனினும் இன்று அமெரிக்காவின் வேலை குறித்தான தரவானது வெளியாகவிருக்கும் நிலையில், இது தங்கம் விலையில் பெரியளவிலான மாற்றத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

இதற்கிடையில் தங்கம் விலையானது 51,100 ரூபாய் என்ற லெவலினை தொடலாம். இதேபோல வெள்ளியின் விலையும் 67,400 என்ற லெவலை தொடலாம். எனினும் தங்கத்தில் ஏற்படும் பெரியளவிலான சரிவினை ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையானது தடுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தினை வாங்க தூண்டலாம்.

ஆதரவளிக்கும் பணவீக்கம்
 

ஆதரவளிக்கும் பணவீக்கம்

கடந்த அமர்வில் டாலரின் மதிப்பானது மீண்டும் சற்று சரிவினைக் காணத் தொடங்கிய நிலையில், மாலை அமர்வில் மீண்டும் தங்கம் விலை ஏற்றம் கண்டது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளில் நிலவி வரும் நெருக்கடி நிலையால், பணவீக்கம் உச்சம் தொடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. ஆக வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தங்கத்தினை வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

 சீனாவின் பொருளாதார நிலை

சீனாவின் பொருளாதார நிலை

சீனாவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் அங்கு கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவின் பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது. சர்வதேச அளவில் மிகப்பெரிய நுகர்வோரான சீனாவில், தங்கத்தின் தேவையானது சரிவடையலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

 காமெக்ஸ் தங்கம் விலை

காமெக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 1.70 டாலர்கள் குறைந்து, 1953.70 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் இதுவரையில் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 காமெக்ஸ் வெள்ளி விலை

காமெக்ஸ் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 0.34% குறைந்து, 25.183 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை இதுவரையில் உடைக்கவில்லை. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 எம்சிஎக்ஸ் தங்கம் விலை

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 135 ரூபாய் குறைந்து, 52,493 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலையானது மீடியம் டெர்மில் குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலையும் குறைந்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 408 ரூபாய் குறைந்து, 67,998 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று கேப் டவுன் ஆகி சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 4967 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 39,752 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து, 5420 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 48 ரூபாய் அதிகரித்து, 43,360 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 54,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

இதே ஆபரண வெள்ளி விலையில் பெரியளவில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 73.30 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 733 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 73,300 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது டாலர், பத்திர சந்தை, பணவீக்கம், வட்டி விகித நடவடிக்கை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் இன்று சற்று சரிவில் காணப்படுகின்றது. இது மீடியம் டெர்மில் இன்னும் சற்று குறையலாம் என்றாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆபரண தங்கத்தினை பொறுத்தவரையில் நீண்டகால நோக்கில் தேவை என்பது அதிகரிக்கவே செய்யும் என்பதால், தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 21st 2022: gold prices remain under pressure ahead of job data

gold price on April 21st 2022: gold prices remain under pressure ahead of job data/தங்கம் விலை இன்றும் குறைந்திருக்கா.. தற்போதைய நிலவரம் என்ன.. இனியும் குறையுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.