மட்டக்களப்பில் டெங்குநோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்குநோய் அதிகரித்து வருகின்றது. கடந்த ஏப்ரல் 09 ஆந் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆந் திகதிவரையான காலப்பகுதியில் 36 பேர் டெங்குநோய் தாக்கத்திற் குள்ளாகியுள்ளனர்.

இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 நோயாளர்களும்இ களுவாஞ்சிக்கடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 நோயாளர்களும்இ ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 நோயாளர்களும்இ செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 நோயாளர்களும்இ கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 நோயாளர்களும்இ கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 நோயாளர்களும்இ வாழைச்சேனைஇ ஓட்டமாவடிஇ வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு நோயாளர்களுமாக மொத்தம் 36 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் மட்டக்களப்புமாவட்டத்தில் இவ் வருடத்தில்இ இதுவரை 283 பேர் டெங்குநோய்த் தாக்கத்திற் குட்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரும் டெங்கு நோயினால் மரணமடையவில்லை எனவும் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ. சுகுணன் மாவட்ட ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்தார்.

இதேவேளை பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் டெங்குநுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காதவகையில் சூழலை துப்பரவாக வைத்துக்கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Media Unit, – Batticaloa
ஊடகப்பிரிவு- மட்டக்களப்பு
Tel – 065 2225769

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.