How to: தனியார் பள்ளி இலவச சேர்க்கை, விண்ணப்பிப்பது எப்படி? How to apply for RTE admission online?

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள், மற்றும் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகள், சுய நிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் (RTE – Right To Education), வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்தோர்களின் குழந்தைகளுக்கு என LKG அல்லது ஒன்றாம் வகுப்புகளில் 25% இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் நேற்று முதல் (ஏப்ரல் 20) தொடங்கி மே 18 வரை பெறப்படுகின்றன. இதற்கான அறிவிப்புகள் சம்பந்தப்பட்ட பள்ளிகள், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இணையதளம் மூலமாகவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இணையதளத்தில் எப்படி இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பது என்பதை பார்க்கலாம்.

பள்ளி மாணவிகள் (சித்திரிப்பு படம்)

ஸ்டெப் 1
முதலில் தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ இணையதளமான www.rte.tnschool.gov.in என்ற இணையத்தளத்திற்குள் செல்லவும்.

ஸ்டெப் 2
அதன்பின் திறக்கும் பக்கத்தில் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் இருக்கும். அதனை படித்து, அந்த ஆவணங்களை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

தேவையான ஆவணங்கள்
மாணவரின் புகைப்படம், மாணவரின் பிறப்பு சென்டர், பெற்றோர்களின் அடையாளச் சான்றுகள், முகவரி சான்றுகள், வருமானச் சான்றிதழ் , சாதி சான்றிதழ், மற்றும் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 3
தேவையான ஆவணங்களை எடுத்துவைத்துக்கொண்ட பின், அதே பக்கத்தில் இருக்கும் start application என்ற பகுதியை க்ளிக் செய்து உள்ளே செல்லவும். இதில் தனிப்பட்ட தகவல்கள் நிரப்ப வேண்டியதாக இருக்கும். ஆவணங்களை பார்த்து கவனமாக நிரப்ப வேண்டும்.

குறிப்பு: 1.8.2018 முதல் 31.7.2019 வரை பிறந்த குழந்தைகள் LKG க்கும், 1.8.2016 முதல் 31.7.2017 வரை பிறந்த குழந்தைகள் ஒன்றாம் வகுப்புக்கும் அப்ளை செய்யலாம்.

பள்ளிக் குழந்தைகள்

ஸ்டெப் 4
தனிப்பட்ட தகவல்கள் நிரப்பிய பின், உங்களுக்கு என தனிப்பட்ட password ஆகியவற்றை நிரப்பிக்கொள்ளவும். தொடர்ந்து save என்று கொடுத்தால் உங்களுக்கு என ஒரு application எண் வரும். அதனை குறித்து வைத்துக்கொள்ளவும். அதற்குக் கீழேயே click here to login என்ற பகுதி இருக்கும். அதனை க்ளிக் செய்தால் திறக்கும் பக்கத்தில் உங்களுடைய application எண்ணையும், password-ஐயும் நிரப்பி login செய்தால் உங்களுக்கான dashboard திறக்கும்.

ஸ்டெப் 5
தொடர்ந்து திறக்கும் பக்கத்தில் பெற்றோர்களின் தகவல்கள், முகவரி குறித்த விவரங்கள் என அனைத்தையும் அடுத்தடுத்து நிரப்ப வேண்டும். ஒவ்வொன்றையும் நிரப்பிய பின் அதற்கான ஆவணங்களை அப்லோடு செய்திட வேண்டும்.

School Children

ஸ்டெப் 6
மாணவரின் புகைப்படம் 100 kb அளவுக்குள், jpg வடிவில் இருக்க வேண்டும். பிறப்பு சான்றிதழ், முகவரி அட்டை, பெற்றோர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவை 1mb அளவுக்குள் jpg வடிவில் இருக்க வேண்டும். இந்த அளவுகளில் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அப்ளை செய்திட வேண்டும்.

ஸ்டெப் 7
ஆவணங்கள் அப்லோடு செய்த பின் save கொடுக்கவும். அதன் பின் உங்கள் முகவரியின் அடிப்படையில், உங்களுக்கு அருகில் இருக்கும் பள்ளிகளின் பெயர்கள் காண்பிக்கப்படும். அவற்றில் உங்களுக்கு விருப்பமான பள்ளியைத் தேர்ந்தெடுத்து save கொடுக்க வேண்டும்.

Children (Representational Image)

இறுதியாக, preview பார்த்து சரி செய்த பின் application form-ஐ submit கொடுக்க வேண்டும்… அவ்வளவுதான். உங்கள் application-ஐ ப்ரின்ட் எடுத்து, அதில் இணைக்கச் சொல்லிக் கேக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து கொண்டு அப்ளை செய்த பள்ளிக்கு நேரில் சென்று application form-ஐ கொடுத்து வந்தால் போதுமானது.

குறிப்பு: இதுபோன்று ஒவ்வொரு application ஆக நிரப்பி, ஐந்து பள்ளிகள் வரை அப்ளை செய்திடலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.