இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி GT 2 ஸ்மார்ட்போன் | சிறப்பு அம்சங்கள் என்னென்ன?! 

புதுடெல்லி: ரியல்மி நிறுவனத்தின் GT 2 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச நிறுவனமான ரியல்மி, இந்தியாவில் பிரீமியம் போன் பிரிவில் GT 2 போனை அறிமுகம் செய்துள்ளது. உலகின் முதல் பயோ பாலிமர் ஸ்மார்ட்போன் டிசைன் கொண்ட போன் இது என பிராண்ட் செய்யப்பட்டு வருகிறது. வரும் 28-ம் தேதி முதல் இந்த போன் விற்பனை இந்தியாவில் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரியில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகி இருந்தது.

சிறப்பு அம்சங்கள்:

  • 6.62 இன்ச் டிஸ்பிளே
  • ஸ்னாப்டிராகன் 888 சிங்கிள் சிப்
  • 5000mAh பேட்டரி, 65 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் வசதி
  • டைப் சி சார்ஜிங் போர்ட்
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்
  • பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 50 மெகா பிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. 16 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.

இந்தியாவில் இரண்டு வேரியண்ட்டுகளில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனும் கிடைக்கிறது.

மூன்று வண்ணங்களில் இந்த போன் வெளியாகியுள்ளது. 4ஜி+5ஜி இணைப்பு வசதியும் இதில் உள்ளது. 8ஜிபி ரேம் கொண்ட போன் 34,999 ரூபாய்க்கும். 12ஜிபி ரேம் கொண்ட போன் 38,999 ரூபாய்க்கும் கிடைக்கும் என தெரிகிறது. அறிமுக சலுகைகளும் இந்த போனுக்கு அறிவிக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

— realme (@realmeIndia) April 22, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.