தமிழ்நாடு, குஜராத் உட்பட மூன்று மாநிலங்கள் 10.5 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி

புதுடெல்லி: இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, பல்வேறு மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் ஆகிய 3 மாநிலங்கள் மொத்தமாக 10.5 மில்லியன் டன் அளவில் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளன. இதனால் உலக அளவில் நிலக்கரி விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் அதிக பட்சமாக 8 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய உள்ளது. தமிழ்நாடு 1.5 மில்லியன் டன்னும், குஜராத் 1 மில்லியன் டன் நிலக்கரியும் இறக்குமதி செய்ய உள்ளன.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக நிலக்கரி விலையுர்ந்துள்ளது. இந்திய மாநிலங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்ய உள்ள நிலையில் நிலக்கிரியின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.