வங்கதேச தலைநகர் டாக்காவில் வாழும் தமிழர்களின் 'வங்கதேச தமிழ்ச்சங்கம்' சார்பில் 12 வது குருதிக்கொடை முகாம்.!

இரமலான் மாதத்தில் குருதிக்கொடை மிக குறைவாக நடப்பதால் அதை ஈடு செய்யும் வகையில் டாக்கா தமிழ்ச்சங்கம் சார்பில் 12 ஆண்டுகளாக வங்கதேச தலைநகர் டாக்காவில் வாழும் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டும் குருதிக்கொடை முகாம் நடத்துவது வழக்கம்

அதன் தொடர்ச்சியாய் இந்த 2022 ஆண்டு 12ஆவது குருதிக்கொடை முகாம் DOHS Baridhara CSD கடையின் இரண்டாவது தளத்தில் அமைந்த பிசியோதெரபி நிலையத்தில் 22/04/2022 காலை 9:30 மணிக்கு தொடங்கியது

நிகழ்வின் தொடக்கத்தில் இந்திய தூதரக அதிகாரி திரு ஞானசம்மந்தன் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்

செம்பிறை சங்கம் சிறப்பான முன்னெடுப்பை செய்திருந்தது. அதன் சார்பில் மருத்துவர், 3 செவிலியர்கள் கலந்து கொண்டு முகாம் நடக்க பேருதவி புரிந்தனர்

பணி நிமித்தமாய் தலைநகர் டாக்காவில் தங்கியுள்ள தமிழர்கள் தத்தம் குடும்பத்தினரோடு வந்திருந்து குருதிக்கொடை அளித்தனர்.

காலை 9:30 மணிக்கு தொடங்கிய முகாம் நண்பகல் 1:30 வரை நீடித்தத இந்த முகாமில், 41 யூனிட் அளவிலான குருதி சேகரித்து வழங்கப்பட்டது. குருதிக்கொடை அளித்தவர்களுக்கு பழச்சாறு, சிற்றுண்டி தமிழ்ச்சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இடம் ஒதுக்கியதந்த குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி வருகைபுரிந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.