டீ விற்றதை நம்பியவர்கள், ஏன் நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை நம்பவில்லை – பிரகாஷ் ராஜ் கேள்வி

Prime Minister Modi sold Tea, refuse to believe that he is also selling the country, Prakash Raj Questioned Amit shah: பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை ஏன் மக்கள் நம்ப மறுக்கிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது, சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பன்மொழிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ். சிறந்த குணச்சித்திர நடிப்புக்காக பெயர் பெற்ற பிரகாஷ் ராஜ் அடிக்கடி சமூகப் பிரச்சனைகள் தொடர்பாகவும் கேள்வி எழுப்பி வருகிறார். குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் தெரிவித்து வருகிறார். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை, டெல்லி விவசாயிகள் போராட்டம் மற்றும் அமித் ஷாவின் இந்தி மொழி கருத்து என பல்வேறு விவகாரங்களில் பிரகாஷ் ராஜ் தன்னுடைய கருத்தை சமூக வலைதளங்கள் மூலமாக வெளிப்படுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்: நெல்லையில் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து… நலம் விசாரித்த முதல்வர் – என்ன நடந்தது?

இந்தநிலையில், தற்போது அவர் பிரதமர் மோடி நாட்டை விற்றுக் கொண்டிருப்பதை மக்கள் ஏன் நம்ப மறுக்கிறார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, பிரகாஷ் ராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”ஒருவர் தேநீர் விற்றதை நம்பியவர்கள், அவர் நாட்டையும் விற்றுக் கொண்டிருப்பதை ஏன் நம்பவில்லை” என பதிவிட்டு, தெரிந்துக் கொள்வதற்காக கேட்டேன் என ஹேஷ்டேக் ஒன்றையும் இணைத்துள்ளார்.

பிரகாஷ் ராஜ்ஜின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.