பில் கேட்ஸை உருவக் கேலி செய்த எலான் மஸ்க்: எதிர்வினை ஆற்றிய நெட்டிசன்கள்

கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை உருவக் கேலி செய்துள்ளார் உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க். அவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் கூட வெளியாகியுள்ளது.

1995 முதல் 2017 வரை உலகின் நம்பர் 1 பணக்காரராக இருந்தவர் பில் கேட்ஸ். இதில் 2010 மற்றும் 2013-ல் அந்த அந்தஸ்த்தை அவர் இழந்திருந்தார். அவர் சிறந்த கொடையாளியும் கூட. அவரை பகிரங்கமாக ட்விட்டர் களத்தில் ட்ரோல் செய்துள்ளார் டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க். அதனை கவனித்த நெட்டிசன்கள் தங்களது ரியாக்‌ஷனை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது போன்களின் இயங்குதளத்தை iOS 15.4-க்கு அப்டேட் செய்திருந்தது. அதில் 37 எமோஜிகள் புதிதாக சேர்க்கப்பட்டன. அதில் ஆண் ஒருவர் பலூன் போல உப்பிய வயிற்றை கொண்டிருக்கும் எமோஜியும் இடம்பெற்றிருந்தது. அதற்கு அப்போது ஆப்பிள் பயனர்கள் சமூக வலைதளங்களில் தங்களது பார்வையை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்நிலையில், அந்த உப்பிய வயிறு கொண்ட எமோஜியையும், பில் கேட்ஸ் புகைப்படத்தையும் இணைத்த படம் ஒன்றை ட்வீட்டில் பகிர்ந்துள்ளார் மஸ்க். அதற்கு நெட்டிசன்கள் பலரும் பலவிதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர். அது பில் கேட்ஸுக்கு ஆதரவாகவும், மஸ்கிற்கு எதிராகவும் உள்ளதைப் பார்க்க முடிகிறது.

‘இவர் நம்மை இறைச்சி சாப்பிட வேண்டாம் என சொல்கிறார்’, ‘அவர் மட்டும் தன்னிடம் இருந்த செல்வத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் உங்களை விட வசதி படைத்தவராக இருந்திருப்பார்’, ‘கேட்ஸை விமர்சிப்பதால் நேரம்தான் வீணாகும்’, ‘நீங்கள் ட்விட்டரை வாங்கிவிட்டால் தலைமை மீம் ஆபிசராக ஆகிவிடலாம்’, ‘அய்யோ! கடவுளே!’ என்பது மாதிரியான ரிப்ளைகளை கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள்.

முன்னதாக, மஸ்க் மற்றும் பில் கேட்ஸ் இடையேயான உரையாடலும் (Chat) வெளியாகி இருந்தது. அதில் மஸ்க், சமூக நலன் சார்ந்த பில் கேட்ஸ் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிகிறது.

— Elon Musk (@elonmusk) April 23, 2022

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.