இப்பவே இப்படியா.. 6 வார உச்சத்தில் பாமாயில் விலை.. இந்தோனேசியாவின் நடவடிக்கைக்கு பிறகு என்னவாகும்?

சர்வதேச அளவில் மிகப்பெரியளவில் பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில், அதன் தாக்கத்தினை பல நாடுகளும் உணரத் தொடங்கியுள்ளன. குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளன.

ஏற்கனவே ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் சன் பிளவர் எண்ணெய் விலையானது மிக மோசமான ஏற்றத்தினை கண்டுள்ளது.

இதற்கிடையில் உள்நாட்டில் விலையை கட்டுப்படுத்த இந்தோனேசியாவும், இம்மாத இறுதியில் இருந்து பாமாயில் இறக்குமதி தடை விதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு இந்தோனேசியா கொடுத்த ஷாக்.. சாமானியர்கள் பெரும் கவலை..!

பாமாயில் விலை உச்சம்

பாமாயில் விலை உச்சம்

இதற்கிடையில் தற்போது பாமாயில் விலையானது ப்யூச்சர் ( ஜூலை ) விலையானது 6% அதிகரித்து, ஆறு வார உச்சமாக 6738 ரிங்கிட் ஆக உயர்ந்துள்ளது. உலகளாவிய பாமாயில் சப்ளையில் இந்தோனேசியாவில் இருந்து தான் கிட்டதட்ட 60% செய்யப்படுகின்றது. ஆக இந்தோனேசியாவின் தடை அறிவிப்பானது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

என்ன காரணம்

என்ன காரணம்

இது உக்ரைனில் நிலவி வரும் பதற்றத்தின் மத்தியில், உலகளாவிய பணவீக்கத்தினை தூண்டியுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இறக்குமதியினையே நம்பியுள்ளன. ஏற்கனவே சன்பிளவர் ஆயில் விலையும் தாறுமாறாக அதிகரித்துள்ள நிலையில், அதன் இறக்குமதியும் பாதிக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதனுடன் கொரோனா கட்டுப்பாடுகளும் தற்போது சேர்ந்து கொண்டுள்ளதால் விலை உச்சம் தொட்டு வருகின்றது.

வரி குறைப்பு
 

வரி குறைப்பு

இந்தியாவின் 60% சமையல் எண்ணெய் விகிதமானது இறக்குமதி மூலம் சரி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக மொத்த பாமாயில் எண்ணெய் இறக்குமதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்ட அளவு 30% ஆகும். பிப்ரவரியில் இந்திய அரசு கச்சா பாமாயிலுக்கான இறக்குமதி வரியை 7.5%ல் இருந்து, 5% ஆக குறைத்துள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய எண்ணெய் நுகர்வோரான இந்தியா, விலையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு சுத்திகரிப்பாளர்களுக்கு உதவவும் முயற்சித்து வருகின்றது.

மக்களுக்கு பாதிப்பு

மக்களுக்கு பாதிப்பு

பாமாயில் மீதான தடைக்கு மத்தியில் இது நிச்சயம் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும். மேலும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் சமையல் எண்ணெய் விலை உள்ளிட்டவற்றில் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், கோத்ரேஜ் கன்சியூமர் புராடக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தினை பாதிக்கலாம். மொத்தத்தில் இது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Palm oil prices hit 6 week high on fears of supply constraint after Indonesia ban

Palm oil prices hit 6 week high on fears of supply constraint after Indonesia ban/இப்பவே இப்படியா.. 6 வார உச்சத்தில் பாமாயில் விலை.. இந்தோனேசியாவின் நடவடிக்கைக்கு பிறகு என்னவாகும்?

Story first published: Monday, April 25, 2022, 14:53 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.