கஞ்சா கடத்தல்காரர்களோடு பிரியாணி விருந்து! – காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர்

நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்காக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி, நாகை அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த மோகன் ( 37) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தலா 2 கிலோ வீதம் 200 பண்டல்களில் 400 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

கடத்தல்காரர்களோடு பிரியாணி சாப்பிட்ட இன்ஸ்பெக்டர்

ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சாவை, நாகை வழியாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியாகும்.

இது தொடர்பாக படகின் காவலுக்கு நின்றிருந்த பாப்பாக்கோயிலைச்  சேர்ந்த சரவணன், கீச்சாம்குப்பம் தெற்கு தெருவைச்  சேர்ந்த ஜெகதீசன், அக்கரைப்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்த சிலம்பு செல்வன், அக்கரைப்பேட்டை திடீர் குப்பத்தைச்  சேர்ந்த நிவாஸ் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக நாகை நகர காவல்நிலைய   இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தார்.

கடத்தல்காரர்களோடு பிரியாணி சாப்பிட்ட இன்ஸ்பெக்டர்

இந்நிலையில், கஞ்சா கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீஸார் கைது செய்த ஜெகதீசன்,  சிலம்பு செல்வன், நிவாஸ் ஆகியோருடன் இன்ஸ்பெக்டர் பெரியசாமி நாகையிலுள்ள ஒரு சொகுசு ஓட்டலில், போலீஸ் சீருடையில் பிரியாணி சாப்பிடும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

இதுகுறித்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜவஹர் விசாரணை நடத்தி கொடுத்த தகவலின்பேரில், தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமியை நேற்று காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.