தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வரப்போகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்.. முதலமைச்சர் ஆலோசனை.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் டெல்லி, அரியானா, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சென்னையில் கொரோனா தொற்று பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை  கட்டுபடுத்த சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை சமீபத்தில் அறிவித்துள்ளது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை 9 மணிக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயரதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பங்கேற்க உள்ளனர். 

இந்த கூட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.