நண்பர் இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி

புதுடெல்லி: 
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண் வக்கீலுமான மரைன் லு பென்னுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. முதல் சுற்று தேர்தலில் எந்த வேட்பாளரும் பெரும்பான்மை வாக்குகளைப் பெறவில்லை.
இதனால் நேற்று முன்தினம் நடந்த பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் மேக்ரான் 58 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்கிறார். 2-வது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
 
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது நண்பர் இமானுவேல் மேக்ரானுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியா, பிரான்ஸ் இடையேயான முறையான செயல் திட்ட கூட்டணியை ஆழப்படுத்தும் வகையில், நாம் இணைந்து பணியாற்றுவதை தொடர நான் எதிர்நோக்குகிறேன் என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.