யூடியூப் தளத்திற்கு வந்த சோதனை – வெளியேறும் ரஷ்ய படைப்பாளிகள்!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, அமெரிக்க டெக் நிறுவனங்கள் பல ரஷ்யா நாட்டில் உள்ள செயல்பாடுகளை நிறுத்தியது. மேலும், ரஷ்ய சமூக வலைத்தளக் கணக்கும் பெரும்பாலும் முடக்கப்பட்டது. இதற்கு ரஷ்யாவும் தற்போது எதிர்வினையாற்றி வருகிறது.

அதன்படி, இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை ரஷ்யா முடக்கியதுடன், உள்நாட்டில் உருவாக்கப்பட்ட தளங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியது. தொடர்ந்து ரஷ்ய மக்களும் அரசுக்கு ஆதரவளிக்கும் விதமாக, அமெரிக்க தளங்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், பிராண்ட் அனலிட்டிக்ஸ் நிறுவனம் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதில், பிப்ரவரி 24 முதல் ஏப்ரல் 20 வரையிலான காலகட்டத்தில்
யூடியூப்
தளத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ரஷ்ய மொழி பேசும் உள்ளடக்கத்தை உருவாக்கும் படைப்பாளிகளின் எண்ணிக்கை 21% விழுக்காடு வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எலான் மஸ்க் மருந்து வேலை செய்கிறது! அம்சமான ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் ட்விட்டர்!

ரஷ்யாவில் வீழ்ச்சியைக் காணும் வெளிநாட்டு டெக் நிறுவனங்கள்

ஆய்வின் முடிவுகளின்படி, இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற பிரபலமான தளங்கள் மீது, ரஷ்யாவைச் சேர்ந்த பயனர்களின் ஆர்வம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்நாட்டில்
YouTube
தளமும் அதிக வீழ்ச்சியைக் கண்டுள்ளதால், கூகுள் நிறுவனம் இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

எனினும், இந்த காலகட்டத்தில் டிக்டாக் தளத்தில் இருந்து வெளியேறிய பயனர்களின் எண்ணிக்கை தான் அதிகம் என்று ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதாவது, 87% விழுக்காடு வரை ரஷ்ய கிரியேட்டர்கள் வெளியேற்றமும், 93% விழுக்காடு வரை காண்டெண்டு வீழ்ச்சியும் கணக்கிடப்பட்டுள்ளது.

வெளியேறிய ரஷ்ய மொழி பேசும் கிரியேட்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் TikTok-ஐத் தொடர்ந்து Instagram அதிகளவு வீழ்ச்சியைக் கண்டுள்ளதாகக் ஆய்வில் தெரியவந்துள்ளது. பிராண்ட் அனலிட்டிக்ஸ் பகுப்பாய்வின்படி, 56% விழுக்காடு ரஷ்ய பயனர்கள் மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறியுள்ளனர். ரஷ்ய கண்டண்டுகளின் அளவும் 55% விழுக்காடு வரைக் குறைந்துள்ளது.

ரஷ்யாவை கைவிடும் டெக் நிறுவனங்கள்? நெருக்கடியை தாங்குமா அரசு!

உள்நாட்டு நிறுவனங்கள் குஷி

அதே நேரத்தில், பயனர்களின் இடம்பெயர்வு, உள்நாட்டின் VKontakte எனும் சமூக வலைத்தளத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. இதன் வளர்ச்சி சமீபத்தில் 22% விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில், டெலிகிராமில் பயனர்களின் எண்ணிக்கை 24% விழுக்காடு அதிகரித்துள்ளது.

“எங்கள் நாட்டு மக்கள், வெளிநாட்டு தளங்களை விட்டு வெளியேற வேண்டும். அதுவே சரியாக இருக்கும். உள்நாட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்த இது உதவியாக இருக்கும். இங்குள்ள மக்களிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. நீங்கள் பயன்படுத்தும் பிற நாட்டுத் தளங்களுக்கு மாற்றாக நம்மிடம் நிறைய சேவைகள் உள்ளன. அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் கூறியது கவனிக்கத்தக்க வேண்டிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.