10 லட்சம் பங்குகளை வாங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. எந்த நிறுவனத்தில் தெரியுமா?

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனமான இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் 10 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார்.

மார்ச் காலாண்டு நிலவரப்படி, ஜுன் ஜுன்வாலா தனது போர்ட்போலியோவில் 10 லட்சம் பங்குகள் அல்லது 0.2% பங்குகளை இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் பைனான்ஸ் நிறுவனத்தில் அதிகரித்துள்ளார்.

இது கடந்த டிசம்பர் 2021 நிலவரப்படி 50 லட்சம் பங்குகள் அல்லது 1.08% பங்குகள் இருந்தது. ஆனால் தற்போது 60 லட்சம் பங்குகள் அல்லது 1.28% பங்குகள் உள்ளன.

ரூ.1 லட்சம் டூ ரூ.3 லட்சம்.. குறுகிய காலத்தில் அதிக லாபத்தை கொடுத்த டாடா பங்கு..!

 முதலீடு அதிகரிப்பு

முதலீடு அதிகரிப்பு

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில், ஜூன் 2021 காலாண்டில் இப்பங்கினில் 2.2% பங்கானது கைவசம் இருந்தது. இது செப்டம்பர் காலாண்டில் 1.08% ஆக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தான் மார்ச் காலாண்டில் மீண்டும் இப்பங்கினில் முதலீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

பங்கு விகிதம் குறைப்பு

பங்கு விகிதம் குறைப்பு

இதே புரோமோட்டர்கள் வசம் இருந்த பங்கின் விகிதம் 9.72%ல் இருந்து, 9.66% ஆக மார்ச் காலாண்டில் குறைக்கப்பட்டுள்ளது. இதே அன்னிய முதலீட்டாளர்களின் விகிதமும் 28.40%ல் இருந்து, 26.36% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அன்னிய முதலீட்டாளர்கள் எண்ணிக்கையானது 228 என்ற விகிதத்தில் இருந்து 220 ஆகவும் குறைந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் முதல் கொண்டு இப்பங்கினில் முதலீடுகளை 4.29%ல் இருந்து 4.23% ஆக குறைத்துள்ளனர். எனினும் அதே நேரம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 17 ஆக அதிகரித்துள்ளது.

மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழ் வர்த்தகம்
 

மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழ் வர்த்தகம்

இப்பங்கின் விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கும் கீழாகவே காணப்படுகிறது. இதற்கிடையில் இப்பங்கின் விலையானது கடந்த ஓராண்டில் 12.87% சரிவினைக் கண்டுள்ளது. இதே நடப்பு ஆண்டில் இதுவரையில் 29.22% சரிவினையும் கண்டுள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கானது பி.எஸ்.இ-யில் 1.64 லட்சம் பங்குகள் பரிமாறியுள்ளது. இதன் மதிப்பு 2.53 கோடி ரூபாயாகும். இதன் சந்தை மூலதன மதிப்பானது 7230 கோடி ரூபாயாகவும் உள்ளது.

இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?

இன்றைய பங்கு விலை நிலவரம் என்ன?

இப்பங்கின் விலையானது இன்று என்.எஸ்.இ-யில் 3.99% குறைந்து, 152.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 157.25 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 151.60 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 313.70 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 130.20 ரூபாயாகும்.

இதே பி.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 3.90% குறைந்து, 152.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 157.55 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 151.75 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 313.50 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 130.20 ரூபாயாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rakesh jhunjhunwala picked 10 lakh shares of this housing finance company

Rakesh jhunjhunwala picked 10 lakh shares of this housing finance company/10 லட்சம் பங்குகளை வாங்கிய ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. எந்த நிறுவனத்தில் தெரியுமா?

Story first published: Monday, April 25, 2022, 19:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.