எலான் மஸ்க்: 44 பில்லியன் டாலர்.. பங்குச்சந்தையிலிருந்து வெளியேறும் டிவிட்டர்..!

டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ-வான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்ற டிவிட்டர் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம் வரலாற்றிலேயே எலான் மஸ்க் முதல் முறையாக 44 பில்லியன் டாலர் என்ற மிகப்பெரிய தொகையைப் பணமாகக் கொடுத்தது டிவிட்டரை வாங்க உள்ளார்.

பல எதிர்ப்புகளையும் தாண்டி டிவிட்டரின் கைப்பற்றும் எலான் மஸ்க், டிவிட்டரை பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற உள்ளார். இதன் மூலம் டிவிட்டர் இனி தனியார் நிறுவனமாக இருக்கப் போகிறது.

டிவிட்டர் விற்பனை.. இறுதி அறிவிப்பு.. எலான் மஸ்கிற்கு ஜாக்பாட்..!

டிவிட்டர்

டிவிட்டர்

16 வருடமாக உலக நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் 2வது முக்கியச் சமுக வலைத்தளமாக விளக்கும் டிவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு 54.20 டாலர் வீதம் அளித்து மொத்த 44 பில்லியன் டாலர் முதலீடு செய்து டிவிட்டரை கைப்பற்ற உள்ளார்.

38 சதவீதம் ப்ரீமியம் விலை

38 சதவீதம் ப்ரீமியம் விலை

ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரத்தை ஒப்பிடுகையில் தற்போது எலான் மஸ்க் கொடுக்கப் போகும் 54.20 டாலர் என்பது சந்தை விலையின் படி 38 சதவீதம் அதிகமாகும். இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய லாபமாகப் பார்க்கப்படுகிறது.

5.66 சதவீதம் உயர்வு
 

5.66 சதவீதம் உயர்வு

இதன் மூலம் டிவிட்டர் பங்குகள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் 5.66 சதவீதம் அதிகரித்து 51.70 டாலராக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 32.16 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஜனநாயகத்தின் அடிப்படையே ப்ரீ ஸ்பீச் என்பதை நான் அதிகம் நம்புகிறேன். இந்தக் கைப்பற்றல் மூலம் டிவிட்டர் தற்போது இருப்பதை விடவும் புதிய சேவைகள் அறிமுகம், அல்காரிதம் வெளியிடுதல், ஸ்பாம் பாட்ஸ்-ஐ நீக்குதல், போன்ற முக்கியமான பணிகள் மூலம் டிவிட்டர்-ஐ மேம்படுத்த உள்ளோம் என எலான் மஸ்க் கூறினார்.

பராக் அகர்வால்

பராக் அகர்வால்

மேலும் இதுக்குறித்து டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் கூறுகையில், டிவிட்டர் நிர்வாகக் குழு எலான் மஸ்க்-கின் 44 பில்லியன் டாலர் ஆஃபர் குறித்துத் தீவிரமாக ஆலோசனை செய்து பங்குதாரர்களுக்கும் சாதகமாக முடிவை பிரட் டெய்லர் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Its official, Elon Musk to acquired Twitter for $44 billion; Soon twitter to be private

Its official, Elon Musk to acquired Twitter for $44 billion; Soon twitter to be private எலான் மஸ்க்: 44 பில்லியன் டாலர்.. பங்குச்சந்தையில் இருந்து வெளியேறும் டிவிட்டர்..!

Story first published: Tuesday, April 26, 2022, 8:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.