அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசிற்கு கொரோனா தொற்று

கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தனக்கு அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், தான் வீட்டில் இருந்தபடியே பணிகளைத் தொடர உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொற்று இல்லை என பரிசோதனை முடிந்த பின்னரே அவர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | பைடன் – கமலா ஹாரீஸ் இடையே மோதல் – அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

57 வயதான கமலா ஹாரிஸ்  இரண்டு டோஸ் தடுப்பூசி  செலுத்தியதோடு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளார். கடந்த வாரம் கலிஃபோர்னியா சென்றிருந்த கமலா ஹாரிஸ், நேற்று முன் தினம் வாஷிங்டன் திரும்பியுள்ளார். இதனால் அவர், அதிபர் ஜோ பைடனுடன் தொடர்பில் எல்லை எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து கமலா ஹாரிசின் பயணத் திட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆலோசனைக் கூட்டங்கள் அனைத்தும் காணொலி வாயிலாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கமலா ஹாரிசின் கணவர் டோக் எம்ஹாஃப் கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். அமெரிக்காவில் பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வரும் நிலையில் உருமாற்றம் அடைந்த எக்ஸ்இ கொரோனா காரணமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

முன்னதாக சபாநாயகர் நான்சி பெலோசி, கேபினட் உறுப்பினர்கள், வெள்ளை மாளிகை ஊழியர்கள் என பல்வேறு அரசியல் தலைவர்கள் எக்ஸ்இ கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளனர்.

மேலும் படிக்க | 85 நிமிடங்கள் அமெரிக்காவின் அதிபர்- கமலா ஹாரீஸூக்கு கிடைத்த கௌரவம்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.