மத வேறுபாடின்றி தொழுகை: ராணுவத்தினர் புகைப்படம் வைரல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஸ்ரீநகர்: இந்திய ராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே ரம்ஜான் மாதத்தில் மத வேறுபாடுகளின்றி தனது படைப்பிரிவினருடன் தொழுகை நடத்தினார். அப்புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டது.

நாடு முழுவதும் முஸ்லிம்கள் ரம்ஜான் மாதத்தை கடைப்பிடிக்கின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் மத வேறுபாடுடின்றி தொழுகை நடத்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி பாராட்டுக்களை பெற்றது. ராணுவத்தில் படை வீரரிலிருந்து அதிகாரிகள் நிலை வரை முஸ்லிம்கள் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.

தொழுகை நடத்திய புகைப்படத்தின் சிறப்பு என்னவெனில் அதனை ஏற்பாடு செய்தவர் 15வது படைப்பிரிவின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பாண்டே. அவருடன் சீக்கியர் ஒருவரும், மேலும் பல ஹிந்துக்களும் தொழுகையில் ஈடுபட்டனர்.

latest tamil news

காஷ்மீரில் மத மோதல்கள் அதிகம். அங்கு ராணுவம் அனைவருக்குமானது என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இதனை செய்துள்ளனர். இதனை பலரும் வரவேற்று கருத்துக்கள் பதிவிட்டனர்.

“மதத்தின் பெயரால் பிளவை உருவாக்க முயற்சிக்கும் கூறுகளுக்கு மதநல்லிணக்க செய்தி இது. இது தான் நமது இந்தியா. அதை எண்ணி பெருமை கொள்வோம்.” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர், ”இந்திய இராணுவத்தில் உள்ள மதச்சார்பற்ற மரபிற்கு சல்யூட்.” என கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.