ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் IPO: முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் ஐபிஓ இன்று அதாவது ஏப்ரல் 27 ஆம் தேதி திறக்கப்பட்டு ஏப்ரல் 29, 2022 வரை திறந்திருக்கும். இந்தியாவில் பிரபலமான மருத்துவமனை நிறுவனமான ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் நிறுவனம் குழந்தைகளுக்கான பல்-சிறப்பு சேவைகள், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், பிறந்த குழந்தை மற்றும் குழந்தை தீவிர சிகிச்சை போன்ற சேவைகளை வழங்குகிறது.

இந்த நிறுவனத்தின் 1580 கோடி ரூபாய் ஐபிஓ பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு முதலீடு செய்யுங்கள்.

குறைந்த பிரீமியத்தில் நல்ல வருமானம்.. எல்ஐசி-யின் இந்த பாலிசியை பாருங்க..!

முக்கியத் தரவுகள்

முக்கியத் தரவுகள்

ஐபிஓ திறப்பு : ஏப்ரல் 27
ஐபிஓ நிறைவு: ஏப்ரல் 29
விலை அளவு: ஒரு பங்கு ரூ. 516-542.
வெளியீட்டு அளவு: ரூ.1,580.8 கோடி
புதிய வெளியீடு: ரூ.280 கோடி
முகமதிப்பு: 10 ரூபாய்
லாட் அளவு: 27 ஈக்விட்டி பங்குகள் மற்றும் அதன் மடங்குகளுக்கு முதலீடு செய்யலாம்
பட்டியல்: BSE மற்றும் NSE.
முன்னணி மேலாளர்கள்: கோடக் இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங், ஜேபி மோர்கன் மற்றும் ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ்.

நிதி திட்டம்

நிதி திட்டம்

இந்த ஐபிஓ-வில் திரட்டப்படும் நிதியை கொண்டு CDC குழுமத்திற்கு வழங்கப்பட்ட மாற்ற முடியாத கடன் பத்திரங்களை மீட்டெடுக்க ரூ.40 கோடியைப் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முதலீடு
 

முதலீடு

அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.244 கோடி அளவிலான தொகையை வர்த்தக வளர்ச்சிக்காக முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ.170 கோடி ஐபிஓ மூலமாகவும், மீதமுள்ளவை உள் வருவாயில் இருந்தும் முதலீடு செய்ய உள்ளது.

6 புதிய மருத்துவமனை

6 புதிய மருத்துவமனை

ரெயின்போ ஆறு புதிய மருத்துவமனைகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளது – ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் தலா இரண்டு, சென்னை மற்றும் என்சிஆர் பகுதிகளில் தலா ஒன்று.

இதன் மூலம் ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் நிறுவனத்தின் புதிதாக 500 படுக்கைகள் சேர்க்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 2000 ஆக உயர உள்ளது.

6 நகரங்கள்

6 நகரங்கள்

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் ஹைதராபாத், பெங்களூரு, விசாகப்பட்டினம், விஜயவாடா, சென்னை மற்றும் என்சிஆர் ஆகிய ஆறு நகரங்களில் 14 மருத்துவமனை மற்றும் மூன்று கிளினிக்குகளைக் கொண்டு இயங்கும் மல்டி ஸ்பாஷாலிட்டி மருத்துவமனையாகும்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் 250 படுக்கைகள் மற்றும் 25-50 படுக்கைகள் கொண்ட நான்கு சிறிய மருத்துவமனைகள் நகரம் முழுவதும் தனது சேவையை விரிவாக்கம் செய்து ஹப் மற்றும் ஸ்போக் மாதிரியில் இது செயல்படுகிறது. ஹைதராபாத்தில் புதிதாக இரண்டு சிறிய ஹாஸ்பிட்டல்களைச் சேர்க்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹப் மற்றும் ஸ்போக் மாடல்

ஹப் மற்றும் ஸ்போக் மாடல்

தற்போது இதே ஹப் மற்றும் ஸ்போக் மாதிரியை பெங்களூர், சென்னை மற்றும் என்சிஆர் பகுதியில் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கத்திற்கு இந்த ஐபிஓ பெரிய அளவில் உதவும்.

60 சதவீத வருவாய்

60 சதவீத வருவாய்

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்-ன் மொத்த வருவாயில் 60 சதவீதம் ஹைதராபாத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்பிரிவில் இருக்கும் சக மருத்துவமனைகளை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதம் உடன் முடிந்த 9 மாதத்தில் ஒரு படுக்கைக்குச் சராசரியாக 45,951 ரூபாய் வருமானத்தைப் பெறுகிறது. இதேபோல் சாரசரியாகப் படுக்கையில் இருக்கும் நோயாளிகளின் காலம் 2.85 நாள் ஆக உள்ளது. இவ்விரு காரணிகளில் ரெயின்போ தான் டாப்பு.

லாபம், கடன்

லாபம், கடன்

டிசம்பர் மாதம் வரையில் முடிந்த 9 மாதத்தில் ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்-ன் ஆப்ரேட்டிங் லாபம் 33.7 சதவீதமாக உள்ளது. வளர்ச்சி அளவு 30 சதவீதமாக உள்ளது. மொத்த கடன் அளவு 40.69 கோடி ரூபாயாக உள்ளது.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

இப்பிரிவில் ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்-ன் சக போட்டி நிறுவனங்கள் அப்பல்லோ ஹாஸ்பிடல் எண்டர்பிரைஸ் லிமிடெட், மேக்ஸ் ஹெல்த்கேர் இன்ஸ்டிடியூட் லிமிடெட், ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட், நாராயண ஹ்ருதயாலயா லிமிடெட் மற்றும் கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்.

முக்கியப் பிரச்சனை

முக்கியப் பிரச்சனை

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் நிறுவனத்தில் மருத்துவர்கள் ஒப்பந்த முறையில் இயங்குவதால் எப்போது வேண்டுமானாலும் முன்னணி மருத்துவர்கள் வெளியேறலாம், இவர்களைத் தக்க வைப்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.

ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்-ன் வருமானம் பெருமளவில் ஹைதராபாத் மற்றும் பெங்களூரை நம்பி மட்டுமே உள்ளது.

கொரோனா தொற்று இந்நிறுவனத்தின் வர்த்தகத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

மருத்துவத் துறையில் ஹப் மற்றும் ஸ்போக் மாடல் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை

சகபோட்டி நிறுவனங்களிடம் இருந்து அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rainbow Children’s Medicare IPO: date, size, investment plan, Risk Factors and all other You Need To Know

Rainbow Children’s Medicare IPO: date, size, investment plan, Risk Factors and all other You Need To Know ரெயின்போ சில்ட்ரன்ஸ் மெடிகேர் IPO: முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.