'அடுத்து கோகோ கோலா… மெக்டொனால்ட்சை வாங்குவேன்’ – டுவிட்டரை தெறிக்கவிடும் எலான் மஸ்க்

வாஷிங்டன்,
உலகின் பிரபல சமூகவலைதளமான டுவிட்டரை பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இடம் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்ய டுவிட்டர் நிறுவனம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்களை கொண்டுவர எலான் மஸ்க் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து அடுத்தடுத்து டுவிட்டுகளை பதிவு செய்து வருகிறார். 
அந்த வகையில் இன்று அதிகாலை மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், பொது நம்பிக்கையை பெற டுவிட்டர் அரசியல் ரீதியில் நடுநிலையுடன் இருக்க வேண்டும். அப்பெடியென்றால் தீவிர வலதுசாரியையும், தீவிர இடதுசாரியையும் எரிச்சலூட்டுதல் என்று அர்த்தம்’ என பதிவிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து மஸ்க் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், அடுத்து நான் கோகோ கோலாவை வாங்கி அதில் மீண்டும் கோகேனை (போதைப்பொருள்) போட உள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவிட்டில், நான் இப்போது மெக்டொனால்ட்சை வாங்கி அங்கு உள்ள ஐஸ்கிரீம் இயந்திரங்களை சரிசெய்யப்போகிறேன்’ என மஸ்க் பதிவிட்டுள்ளார்
இதனை தொடர்ந்து எலான் மஸ்க் பதிவிட்டுள்ள மற்றொரு டுவிட்டில், டுவிட்டரை அதிகபட்ச மகிழ்ச்சி தரும் இடமாக மாற்றோம்’ என பதிவிட்டுள்ளார்.
அடுத்தடுத்து டுவிட் செய்த எலான்  மஸ்க் மெக்டொனால்ட்சை வாங்குவது தொடர்பாக பதிவிட்ட டுவிட்டை நீக்கி அதன் ஸ்கீரின் ஷார்ட்டை மீண்டும் பதிவிட்டு, கேளுங்கள்… என்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.. சரியா’ என பதிவிட்டுள்ளார்.
டுவிட்டரை வாங்கும் நடவடிக்கையில் இறுதிகட்டத்தில் உள்ள எலன் மஸ்க் அடுத்தடுத்து டுவிட்டரில் கருத்துக்களை தெரிவித்து வரும் நிகழ்வு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.