புதிய கார் வேண்டுமா..? இனி 30 நிமிடம் போதும்..!

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செலவுகளை அதிகரித்த காரணத்தால் அடுத்தடுத்து விலையை உயர்த்தி வருகிறது, இதோடு பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்துள்ள காரணத்தால் கார் விற்பனையில் கடந்த 2 மாதங்களாகவே அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வந்தது.

கார் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நாட்டின் முன்னணி தனியார் வங்கியான ஹெச்டிஎப்சி வங்கி முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது.

3 மாதத்தில் ரூ.10000 கோடி லாபம்.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தும் ஹெச்டிஎப்சி வங்கி..!

ஹெச்டிஎப்சி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி

ஹெச்டிஎப்சி வங்கி மீதான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ள நிலையில் முக்கியமான கடன் வர்த்தகத்திலும், பல்வேறு டிஜிட்டல் சேவை திட்டங்களில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்து வருகிறது.

 கார் கடன்

கார் கடன்

இந்த நிலையில், ஹெச்டிஎப்சி வங்கி தற்போது கார் கடன் வர்த்தகத்தை முக்கியமான வர்த்தகப் பிரிவாகக் கையில் எடுத்துள்ளது. கார் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், கார் கடன் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துடனும் ஹெச்டிஎப்சி வெறும் 30 நிமிடத்தில் கார் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

30 நிமிடத்தில் கார் கடன்
 

30 நிமிடத்தில் கார் கடன்

இப்புதிய திட்டத்தை Xpress Car Loans என்ற பெயரில் தனது ஆன்லைன் தளத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக 30 நிமிடத்தில் கார் கடன் அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வங்கி சேவை தரம்

வங்கி சேவை தரம்

தற்போது இந்திய வங்கிகளில் கார் கடன் வாங்க வேண்டும் என்றால் ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பம் சமர்ப்பித்த 48 முதல் 72 மணிநேரத்தில் தான் கிடைக்கும். இந்த நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி வெறும் 30 நிமிடத்தில் கார் லோன் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகவும், வங்கி சேவை தரத்தை புதிய உச்சத்திற்குக் கொண்டு செல்லும் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

15000 கோடி ரூபாய் கடன்

15000 கோடி ரூபாய் கடன்

தனிநபர் பிரிவில் வீட்டுக் கடனுக்கு அடுத்தப் படியாக வங்கிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கடன் வர்த்தகம் என்றால் அது கார் லோன் தான். அந்த வகையில் 2023ஆம் நிதியாண்டில் இந்த 30 நிமிட கார் லோன் திட்ட உதவியுடன் ஹெச்டிஎப்சி வங்கி சுமார் 10000 முதல் 15000 கோடி ரூபாய் அளவிலான கடனை கார் லோன் பிரிவில் அளிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கார் லோன் வட்டி விகிதம்

கார் லோன் வட்டி விகிதம்

ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7.95 முதல் 8.30 சதவீதம் வரையிலான வட்டியில் கார் லோன் அளிக்கிறது. இதேவேளையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 7.20 சதவீதம் வட்டியில் இருந்து கார் லோன் அளிக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

HDFC Bank new Xpress Car Loans scheme; Loan approval in just 30 minutes

HDFC Bank new Xpress Car Loans scheme; Loan approval in just 30 minutes புதிய கார் வேண்டுமா..? இனி 30 நிமிடம் போதும்..!

Story first published: Thursday, April 28, 2022, 14:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.