பாரதிதாசன் பல்கலை. வேலைவாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Trichy Bharathidasan University recruitment 2022 apply soon: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயிரி தகவல் தொழில்நுட்பத்துறையில் முதுநிலை திட்ட ஆய்வாளர், திட்ட உதவியாளர், கள உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Senior Research Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc. Zoology/Aquaculture படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ.35,000

Project Fellow

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Sc. Bioinformatics அல்லது ஏதேனும் ஒரு Life Science பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.14,000

Field Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு B.Sc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 9,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் தேதி : 04.05.2022

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, தங்கள் சுயவிவர குறிப்புடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : [email protected]

இதையும் படியுங்கள்: தமிழக கல்வித் துறையில் ரூ32,000, ரூ45,000 சம்பளத்தில் வேலை: நீங்கள் விண்ணப்பித்து விட்டீர்களா?

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.bdu.ac.in/docs/employment/bioinfo-adv.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.