Tamil News Today Live: இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசுக்கு அனுமதி!

Tamil Nadu News Updates: இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண பொருள்களை வழங்க அனுமதியளித்தது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம். மத்திய அரசின் நிவாரண உதவயோடு சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு – 2 பேர் கைது

நாமக்கல்லில் காளிசெட்டிபட்டியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது கடத்தப்பட்ட 11 வயது சிறுமி மீட்பு. சிறுமியை கடத்தியதாக அதே ஊரை சேர்ந்த பொன்னுமணி, மணிகண்டன் ஆகியோர் கைது.

2 மாத கைக்குழந்தையுடன் அகதிகளாக தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்

இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்வு.

ஒரே விலையில் நீடிக்கும் பெட்ரோல், டீசல்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 26வது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ110.85க்கும், டீசல் ரூ100.94க்கும் விற்பனை.

பிரதமர் 3 நாள் வெளிநாடு பயணம்

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பயணம். ஜெர்மனிக்கு இன்று அதிகாலை பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார்.

Live Updates
08:56 (IST) 2 May 2022
கடும் வெயில் : ஒடிஷாவில் காலை 6 மணிக்கு பள்ளி திறப்பு

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ஒடிசாவில் பள்ளி வகுப்பு நேரம் காலை 6 மணி முதல் 9 மணியாக மாற்றியமைப்பு. இன்று முதல் அமலாகிறது

08:38 (IST) 2 May 2022
நீட் தேர்வு – அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் வரும் 6-ம் தேதியுடன் முடிவடையவிருந்த நிலையில், வரும் 15-ம் தேதி வரை நீட்டிப்பு. இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்

08:24 (IST) 2 May 2022
விமானம் தரையிறங்கும்போது விபத்து – பயணிகள் காயம்

மேற்கு வங்கத்தில் மோசமான வானிலை காரணமாக துர்காபூர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஸ்பைஸ் ஜெட விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விபத்து. விமானம் தரையிறங்கும்போது, விபத்துக்குள்ளானதில் காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதி

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.