IPO-வில் முதலீடு செய்ய அலைமோதும் எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள்.. என்ன காரணம்..?!

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ வெளியிடும் எல்ஐசி நிறுவனம் அரசு நிறுவனமாக இருக்கும் காரணத்தால் சனிக்கிழமையும் முதலீடு செய்யச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் மாபெரும் 21000 கோடி ரூபாய் ஐபிஓ-வில் எல்ஐசி ஊழியர்களும், எல்ஐசி பாலிசிதாரர்களும் மற்ற பிரிவினரைக் காட்டிலும் அதிகப்படியான முதலீட்டை செய்துள்ளனர். இந்த ஆர்வத்திற்கு என்ன காரணம்..?!

தொடர்ந்து வெளியேறும் ஊழியர்கள்.. இருந்தாலும் 10.9% வருவாய் வளர்ச்சியில் காக்னிசென்ட்!

எல்ஐசி

எல்ஐசி

எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ மே 2ஆம் தேதி ஆங்கர் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்ட நிலையில் மார்ச் 4ஆம் தேதி அதாவது நேற்று ரீடைல் முதலீட்டாளர்களுக்குத் திறக்கப்பட்டது. ஆரம்பம் முதலே சிறப்பான முதலீட்டை எல்ஐசி இந்த ஐபிஓ-வில் பெற்று வந்தாலும், எல்ஐசி ஊழியர்களும், எல்ஐசி பாலிசிதாரர்களும் ஒதுக்கப்பட்ட பங்குகளுக்கு அதிகப்படியான முதலீடுகள் குவிந்ததுள்ளது.

சில்லறை விற்பனை

சில்லறை விற்பனை

இந்த நிலைக்கு முக்கியக் காரணம் சில்லறை விற்பனை பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்குப் பங்கு ஒதுக்கீடு அனைத்தும் சீட்டுக் குலுக்கல் முறையில் லாட் அடிப்படையில் அளிக்கப்படும். அதாவது 15 எல்ஐசி பங்குகள் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி பணியாளர்கள்
 

எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி பணியாளர்கள்

ஆனால் எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் எல்ஐசி பணியாளர்கள் பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் முதலீட்டு அளவுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் பங்குகள் எண்ணிக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 15 எல்ஐசி பங்குகள் கிடைக்காவிட்டாலும் கட்டாயம் சில எண்ணிக்கையில் பங்குகள் கிடைக்கும்.

அனைவருக்கும் பங்கு

அனைவருக்கும் பங்கு

இத்தகைய முறையில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் கட்டாயம் ஐபிஓவில் பங்குகள் கிடைக்கும் என்பது தான். யாருக்கும் ஏமாற்றம் இருக்காது என்பதால் மத்திய அரசு இந்த முறையைத் தேர்வு செய்துள்ளது.

வாய்ப்பு

வாய்ப்பு

எல்ஐசி பாலிசிதாரர் மற்றும் பணியாளர்கள் பிரிவின் கீழ் வந்தால், ஒருவர் எவ்வளவு அதிகமாக விண்ணப்பிக்க முடியுமோ அவ்வளவு அதிகமாக விண்ணப்பிக்க வேண்டும். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அதிக எல்ஐசி பங்குகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும்.

4 லட்சம் வரை

4 லட்சம் வரை

எல்ஐசி பாலிசிதாரர் மற்றும் பணியாளர்கள் பிரிவின் கீழ் ஒருவர் தலா 2 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். இதன் மூலம் 210 பங்குகளைப் பெற முடியும். இதேபோல் இரு பிரிவிலும் வருபவர்கள் உயர்மட்ட அளவுகள் விதிமுறைப் படி 4 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC IPO: Why policyholders, employees apply for maximum lots

LIC IPO: Why policyholders, employees apply for maximum lots IPO-வில் முதலீடு செய்ய அலைமோதும் எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள்.. என்ன காரணம்..?!

Story first published: Thursday, May 5, 2022, 14:06 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.