பிரித்தானிய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்களுக்கு ஒரு முக்கிய தகவல்! நாளை தான் கடைசி நாள்


பிரித்தானியாவில் மே 9ஆம் திகதிக்குள் 4 மில்லியனுக்கும் அதிகமான பொதுமக்கள் தங்கள் பாஸ்போர்ட்களை சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்களை புதுப்பிக்க வேண்டியவர்கள் அதற்கான ஆவணங்களை கொடுக்க தயார் ஆகவே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
10 வார தாமதங்களுக்கு மத்தியில் திங்கட்கிழமை காலக்கெடுவிற்கு முன்னதாக பாஸ்போர்ட்டுகளை சரிபார்க்க பிரித்தானியர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி மே 9ஆம் திகதி திங்கள் ‘பாஸ்போர்ட் புதுப்பித்தல் நாள்’ என்று அழைக்கப்படுகிறது.
அதாவது ஜூலை 18 வாக்கில் விமானத்தில் செல்ல விரும்புவோருக்கு 10 வார பாஸ்போர்ட்டை புதுப்பிப்பதற்கான கடைசி திகதி மே 9 ஆகும்.

ஏனெனில் பிரித்தானியா மற்றும் வேல்ஸில் உள்ள பல பள்ளிகள் கோடை விடுமுறையை தொடங்கும் நேரம் அதுவாகும்.
பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி பிரித்தானியாவின் மொத்த மக்கள் தொகையில், 7 சதவீதம் பேரின் ஆவணங்கள் ஜூலை 18க்கு முன்னர் காலாவதியாகிவிடும் என தெரியவந்துள்ளது.

கனடாவில் கடைசியாக 8 மாதங்களுக்கு முன் காணப்பட்ட தமிழ் இளைஞன் நிலை என்ன? வெளியான புகைப்படம்

மே 9 ஆம் திகதிக்குள் உங்கள் பாஸ்போர்ட் செல்லுபடியாகுமா என சரிபார்த்தால் கோடையில் செல்ல வேண்டிய பயணத்தை தடையின்றி மேற்கொள்ளலாம்.
அதாவது புதிய ஆவணங்கள் சரியான நேரத்தில் வந்து சேரும்.

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்வது சட்டத்திற்கு எதிரானது.
இதோடு பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இப்போது பிரித்தானியப் பயணிகள் தாங்கள் செல்லும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டை விட்டு வெளியேற விரும்பும் திகதிக்கு பிறகு குறைந்தது மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும் கூறுகிறது.

முக்கியமாக கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பலரும் தங்கள் பாஸ்போர்ட்களை வெளியில் கூட எடுத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
இதனால் தங்கள் சொந்த பாஸ்போர்டில் காலாவதியாகும் திகதியை சரிபார்த்து கொள்ளவேண்டும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.