மலிவான விலையில் ஆப்பிள் டிவி… ரகசியத்தை லீக் செய்த வல்லுநர்

ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டின் இரண்டாம் பாதியில் மலிவான ஆப்பிள் டிவி மாடலை அறிமுகம் செய்யலாம் என ஆப்பிள் வல்லுனராக அறியப்படும் மிங் சி கியோ தெரிவித்து இருக்கிறார். போட்டியாளர்களை எதிர்கொள்ள நிலவும் இடைவெளியை போக்க வழி செய்யும் வகையில், சாதனத்தின் விலை இருக்கும் என கணிக்கிறார்.

தற்போது, ஆப்பிள் டி.வி. ஹெச்டி 32ஜிபி வேரியண்ட் மாடல் ரூ15,900க்கும், ஆப்பிள் 4K மாடல் ரூ18,900க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கியோ, மலிவான ஆப்பிள் டிவி மாடலின் சிறப்பு அம்சங்களை வெளியிடவில்லை. ஆனால், அவை அமேசானின் Fire TV Stick 4k Max போன்ற போட்டி சாதனங்களுக்கு ஏற்ப ரூ.6,499 இல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

4k ஆப்பிள் டிவி சாதனத்தை விட கணிசமாக மலிவான பட்ஜெட் விருப்பத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஆப்பிள் முயற்சிக்கிறது.

தி வெர்ஜ் படி, ஆப்பிள் டிவியில் உள்ள எகெஸ்டண்டட் டிஸ்ப்ளே ஐடெடிபிகேஷன் டேட்டா (EDID) போன்ற அம்சம் மிகவும் பிரபலமானது. EDID அம்சம் செட்-டாப் பாக்ஸ் அல்லது புளூ-ரே பிளேயர் மற்றும் இதர சாதனங்களை எதுபோன்ற டிஸ்ப்ளே பிளக்-இன் செய்யப்பட்டு உள்ளது என்பதை கண்டறியும். இதுதவிர, ஆப்பிள் டிவி பலவிதமான ஹோம் தியேட்டர்களை ஆதரிக்கிறது.

குறிப்பாக, Apple TV உங்கள் டிவியின் திறன்களை சரியாகக் கண்டறிந்து அதற்கேற்ப உள்ளடக்கத்தை வெளியிடும். எடுத்துக்காட்டாக, உங்கள் டிவி HDRஐ ஆதரித்தால், சாதனம் அதன் EDID அம்சம் மூலம் அதைக் கண்டறிந்து உள்ளடக்கத்தை வெளியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால், ஆப்பிளின் ஸ்ட்ரீமிங் சாதனங்களின் ஒப்பீட்டளவில் அதிக விலை, பட்ஜெட் ஸ்ட்ரீமிங் அனுபவத்தைப் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு அணுக முடியாததாக உள்ளது.

சந்தையில் 4k திறனில் சிறப்பான அம்சங்களை வழங்கும் சாதனங்களுக்கு மாற்றாக, ஆப்பிளின் புதிய மலிவு விலை டிவி வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.