தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் யூ-ட்யூப் சேனல் மர்மநபர்களால் முடக்கம்

நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸின் யூ-ட்யூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது தனித்துவமான கதைத் தேர்வு மற்றும் நடிப்பின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்த தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். மேலும், நடிகராக மட்டுமில்லாமல், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என்ற பன்முகத்திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘எதிர்நீச்சல்’ படத்தை தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் முதன்முதலாக தயாரித்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், இதையடுத்து வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் ‘வேலையில்லா பட்டதாரி’, ‘காக்கி சட்டை’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘நானும் ரௌடிதான்’, ‘விஐபி 2’, ‘வடசென்னை’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார்.

image

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் படங்கள் தயாரித்தது மட்டுமின்றி, அதனபேரில் யூ- ட்யூப் சேனல் ஒன்றையும் நடிகர் தனுஷ் நடத்தி வந்தார். குறிப்பாக இந்த யூ- ட்யூப் சேனலில், தனுஷ் நடித்து தயாரித்திருந்த ‘மாரி 2’ படத்தின் பிரபல பாடலான ரௌடி பேபி பாடல் வெளியாகி பல்வேறு புதிய சாதனைகளை படைத்திருந்தது. இந்நிலையில், ரௌடி பேபி பாடல் உள்பட வுண்டர்பார் பிலிம்ஸ் யூ- ட்யூப் சேனல், மர்மநபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியடைய செய்துள்ளது. அந்த சேனலில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.