இன்று பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை

2022 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று 67 ஆவது ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.

மும்பை, ஐ.பி.எல் 15ஆவது சீசன், மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனேவில் நடந்து வருகிறது. பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் தற்போது பிளே ஆப் சுற்றை நோக்கி நகர்ந்து வருகிறது.

நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று (18) நடைபெற்ற 66ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி துடுப்பாட்டத்தை தேர்வு விக்கெட் இழப்பின்றி 210 ஓட்டங்கள் பெற்றது.

டி காக் 70 பந்துகளில் 140 ஓட்டங்களிலும், ராகுல் 51 பந்துகளில் 68 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

211 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 208 ஓட்டங்கள் மொத்தமாக பெற்றது. இதனால் லக்னோ அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லக்னோ அணி 18 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.