2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இந்த தேதியில் அறிவிப்பு!

T20 World Cup 2024: இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.  இதற்கான இந்திய அணி எப்போது வெளியாகும் என்று பலரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோருடன் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முக்கிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு மே 1 ஆம் தேதி அணி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெறுவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பிசிசிஐ, அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றன.

வீரேந்திர சேவாக், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஜாகீர் கான், ஜூலன் கோஸ்வாமி, வாசிம் ஜாஃபர் மற்றும் கே ஸ்ரீகாந்த் போன்ற பிரபல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்கள் அணிகளை சமூக வலைத்தளங்களில் பெயரிட்டு வருகின்றனர்.  இதில் மஞ்ச்ரேக்கரின் அணி தேர்வு சர்ச்சையை எழுப்பியுள்ளது. காரணம் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியாவை அவரது அணியில் சேர்க்கவில்லை. சுவாரஸ்யமாக, சேவாக் சொன்ன அணியிலும் ஹர்திக் பாண்டியா பெயர் இல்லை. இதற்கிடையில், பந்துவீச்சில் பலரும் மயங்க் யாதவ் பெயரை தங்களது அணியில் சேர்த்துள்ளனர். அதே சமயம் முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் பெயர்கள் முக்கியமானதாக உள்ளது.

விக்கெட் கீப்பிங்கில் யாரை தேர்வு செய்வது என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ரிஷப் பந்த் கண்டிப்பாக இடம் பெறுவார் என்ற போதிலும் கூடுதல் விக்கெட் கீப்பர் தேர்வில் KL ராகுல் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம். மேலும் ரோஹித் ஷர்மாவை அணியின் கேப்டனாக நியமிப்பதற்கான பிசிசிஐயின் முடிவை பலர் எதிர்த்து கேள்வி எழுப்பி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்தில் விராட் கோலி, ஷுப்மான் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரில் யார் இடம் பெற போகிறார்கள் என்ற கேள்வியும் பலருக்கும் உள்ளது.  இந்த ஆண்டு 2024 டி20 உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. 

இந்த டி20 உலக கோப்பை முடிந்த பிறகு ரோஹித் மற்றும் கோலி டி20 போட்டிகளில் ஓய்வு பெற வேண்டும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். ” ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வேண்டும், மேலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கான பிராண்ட் அம்பாசிடர்களில் ஒருவரான யுவராஜ், டி20 கிரிக்கெட்டில் அதிக இளைஞர்கள் இடம்பெறுவதை பார்க்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.