இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள கனேடிய தமிழர்கள்: தடையாக நிற்கும் தடைகள்


இலங்கையில் கடுமையான எரிபொருள் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், கனேடிய தமிழர்கள் அமைப்பு ஒன்று இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.

ஆனால், இலங்கை அந்த அமைப்பின் மீது பல தடைகள் விதித்துள்ளதால், அந்த அமைப்பால் இலங்கையிலுள்ள மக்களுக்கு உதவிகளை அனுப்ப இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை இப்போது கடினமான ஒரு சூழலில் உள்ளது என்று கூறும் கனடாவின் ரொரன்றோவில் இலங்கைக்கான consul generalஆக பொறுப்பு வகிக்கும் Thustara Rodrigo, ரொரன்றோவில் வாழும் இலங்கையர்கள் இலங்கைக்கு உதவ விரும்புவதாகக் கூறி, தூதரக அலுவலகத்தை அணுகி வருவதாக தெரிவிக்கிறார்.

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள கனேடிய தமிழர்கள்: தடையாக நிற்கும் தடைகள்

ஆனால், கனடா தமிழ் காங்கிரஸ் ஆலோசனைக் குழு உறுப்பினரான Ken Kandeepan என்பவர், இலங்கைக்கு உதவி அனுப்புவதை இலங்கை அரசு கடினமாக்கியுள்ளது என்கிறார்.

அதற்குக் காரணம், கனடா தமிழ் காங்கிரஸ் உட்பட பல தமிழ் அமைப்புகள் மீது இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு தடைகள் விதித்துள்ளதுதான் என்று கூறும் அவர், ஆகவே எங்களால் நேரடியாக எந்த உதவியும் செய்யமுடியவில்லை என்கிறார்.

ஆக, கனடா வாழ் தமிழர்கள் இலங்கைக்கு உதவ விருப்பம் தெரிவித்தும், இலங்கை அரசின் தடைகளால், உதவ இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர்கள் வருத்தம் அடைந்துள்ளார்கள்.
 

இலங்கைக்கு உதவ முன்வந்துள்ள கனேடிய தமிழர்கள்: தடையாக நிற்கும் தடைகள்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.