Tamil News Live Update: பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை தொடங்கியது. கிலோ ரூ..79க்கு விற்பனை!

Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.110.85 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 100.94 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு!

5,529 காலி பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு, தமிழகம் முழுவதும் 4012 மையங்களில் இன்று (மே 21) நடக்கிறது. மொத்தம் 11.78 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தேர்வு எழுதுபவர்கள், ஹால் டிக்கெட் உடன் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்றின் பிரதி மற்றும் அசல் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குரூப் -2 தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிடப்படும்.

IPL 2022: ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐபிஎல் போட்டியில் நேற்று சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த சென்னை அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, சிஎஸ்கே அணியில் மொயீன் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் குவித்தார். தொடர்ந்து 151 ரன்கள் இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

Tamil News Latest Updates

குறைந்த விலையில் தக்காளி விற்பனை!

மழைப்பொழிவு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளியின் விலை கிலோவிற்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் பண்ணை பசுமை கூட்டுறவு அங்காடி மூலம், மாவட்டங்களில் குறைந்த விலையில் தக்காளி விநியோகம் செய்ய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நாள் ஒன்றுக்கு 4 மெட்ரிக் டன் தக்காளிகள் கொள்முதல் செய்யப்பட்டு, 80 முதல் 85 ரூபாய்க்கு விற்கப்படும்.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று 1 கிலோ தக்காளி விலை ரூ.90 ஆகவும், சில்லறை விற்பனை நிலையங்களில் 1 கிலோ தக்காளி விலை ரூ.110க்கும் விற்பனையாகிறது.

ரூ. 1,500 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்!

கேரள மாநிலம் அகத்தியர் தீவு அருகே ரூ. 1,500 கோடி மதிப்புள்ள, 218 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. லட்சத்தீவு அருகே வெளிநாட்டிலிருந்து கடத்தப்பட்டு கைமாற்றப்பட்டபோது, இந்த போதைப்பொருள் பிடிபட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 20 பேரை, கொச்சி கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
09:39 (IST) 21 May 2022
பண்ணை பசுமை அங்காடியில் தக்காளி விற்பனை!

தக்காளி விலை ஏற்றத்தை குறைக்கும் வகையில் பண்ணை பசுமை அங்காடிகளில் தக்காளி விற்பனை தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 90க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பண்ணை பசுமை அங்காடியில் ஒரு கிலோ தக்காளி ரூ.79க்கு விற்பனையாகிறது.

09:08 (IST) 21 May 2022
ரூ. 3,006 கோடி நிதி ஒதுக்கீடு!

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்த, ரூ. 3,006 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

08:37 (IST) 21 May 2022
ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினம்!

ராஜீவ் காந்தியின் 31வது நினைவு தினத்தையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்!

08:36 (IST) 21 May 2022
1,500 பேர் மீது வழக்குப்பதிவு!

கடலூர் பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, அதிமுக முன்னாள் அமைச்சர் சம்பத் உள்ளிட்ட 1,500 பேர் மீது புதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.