அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்க்குள் செல்ல நிரந்தரத் தடை: விளாடிமிர் புடின்

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச கவனங்களை ஈர்த்துள்ளது.

ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபருக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு பதிலடி; 113 விமானங்களை கைப்பற்றிய ரஷ்யா

இந்த புதிய பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பிடென் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஃபேஸ்புக் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் உட்பட பல அமெரிக்க முக்கியஸ்தர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இதில் வியப்பளிக்கும் விஷயமும் ஒன்று உள்ளது. அமெரிக்காவின் (America) முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது பல கேள்விகளையும் எழுப்புகிறது.

அமெரிக்க அதிபராக பதவியில் இருந்தபோது, ​​​​டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் கடுமையாக இருந்ததில்லை என்பது காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் புடினைப் பகிரங்கமாகப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க உளவுத்துறையின் கருத்துக்கு எதிராகவும் பேசினார் என்பது உலக வரலாறு.

தற்போதைய தடை பட்டியல் புதுப்பிக்கப்பட்ட பிறகுக், மொத்தம் 963 அமெரிக்கர்கள் ரஷ்யாவிற்குள் நுழைய நிரந்தரமாக தடை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க | உக்ரைன் எஃகு அலையை கைப்பற்றிய ரஷ்யா: சரணடைந்த 531 பணியாளர்கள்

உக்ரைன் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா முனைப்புடன் செயல்பட்டது.  ரஷ்ய பொருளாதாரத்தை முடக்கச் செய்யும் பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் பொருளாதார நிலைமையை கடினமாக்கியுள்ளன, 

புதுப்பிக்கப்பட்ட பட்டியலில் பெரும்பான்மையான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பட்டியலில், அமெரிககவின் தற்போதைய மற்றும் முன்னாள் அரசாங்க அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் இடம் பெற்றுள்ளனர்.

2018 இல் இறந்த செனட்டர் ஜான் மெக்கெய்ன் கூட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார் என்பதும் இந்த பட்டியலின் விசித்திரமான அம்சமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க |  ரஷ்யா போரில் டால்பின்களை களம் இறக்கியுள்ளதா; அமெரிக்கா வெளியிட்டுள்ள பகீர் தகவல்

ஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரினால், உலகின் மிகப்பெரிய விமான நிறுவனத்தின் 113 ஜெட் விமானங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் காரணமாக, உக்ரைனில் சேதங்கள் அதிகரித்துள்ளன. ரஷ்யாவின் படையெடுப்பால், உலக அளவிலும் பல்வேறு எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. 

கச்சா எண்ணெய் விலை உயர்வு முதல், உலகம் பல்வேறு வகையான சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த தாக்கத்தில் இருந்து உலகம் எப்படி மீளப்போகிறது என்ற கவலைகளுக்கு மத்தியில் ரஷ்யாவுக்கு மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளன. 

அதற்கு எதிர்வினையாற்றும் வகையில் ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க | உக்ரைன் போரின் தாக்கத்தை உணர்த்தும் மனம் பதற வைக்கும் காட்சிகள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.