யெஸ் பேங்க்- DHFL வழக்கு: ABIL குரூப் சேர்மனை கைது செய்தது சிபிஐ

யெஸ் பேங்க் மற்றும் DHFL குழுமத்தின் வழக்கு தொடர்பாக ABIL குழுமத்தின் சேர்மன் அவினாஷ் போஸ்லே என்பவரை சிபிஐ கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக யெஸ் பேங்க் மற்றும் DHFL குழுமத்தின் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு அதிரடி சோதனைகள் நடைபெற்றது என்பது தெரிந்ததே.

கடந்து 2020 ஆம் ஆண்டு எஸ் பேங்க் நிறுவனரான கபூர் மற்றும் DHFL நிறுவனத்தின் கபில் மற்றும் தீரஜ் ஆகியோர்களை சிபிஐ கைது செய்து, அவர்கள் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தது.

சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?

ABIL குரூப் சேர்மன்

ABIL குரூப் சேர்மன்

இந்த நிலையில் இந்த வழக்கில் சில ரியல் எஸ்டேட் பிரபலங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ கண்டுபிடித்த நிலைஇயில் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ABIL குரூப் நிறுவனத்தின் மீது சிபிஐக்கு சந்தேகப்பார்வை ஏற்பட்டது.

யெஸ் பேங்க் மற்றும் DHFL வழக்கு

யெஸ் பேங்க் மற்றும் DHFL வழக்கு

இந்த நிலையில் யெஸ் பேங்க் மற்றும் DHFL வழக்கில் மேலும் சில ஆதாரங்கள் கிடைத்த நிலையில் ABIL குழுமத்தின் சேர்மன் அவினாஷ் போஸ்லேவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர் என்றும் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

சொத்துக்கள் பறிமுதல்
 

சொத்துக்கள் பறிமுதல்

கடந்த ஜூன் மாதம் ABIL குழுமத்தின் சேர்மன் அவினாஷ் போஸ்லே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 40 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த சொத்துக்கள் அனைத்தும் முறைகேடு செய்த பணத்தில் இருந்து வாங்கியவை என்றும் சிபிஐ தரப்பிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ABIL நிறுவனத்தின் வளர்ச்சி

ABIL நிறுவனத்தின் வளர்ச்சி

இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ABIL நிறுவனத்தை நடத்தி வரும் அவினாஷ் போஸ்லே, கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் தனது நிறுவனத்தை தொடங்கினார். கடந்த 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

அரசியல்வாதிகளுடன் தொடர்பு

அரசியல்வாதிகளுடன் தொடர்பு

இந்த நிறுவனத்தில் போஸ்லே மகன் அமித் முக்கிய பங்கு வகிக்கிறார் என்பதும் சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுடன் போஸ்லே குடும்பத்திற்கு தொடர்பு இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக போஸ்லே மகள் சுவப்னா, மகாராஷ்டிரா அமைச்சரை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

CBI arrests ABIL group chairman Avinash Bhosale in Yes Bank – DHFL case

CBI arrests ABIL group chairman Avinash Bhosale in Yes Bank – DHFL case | யெஸ் பேங்க்- DHFL வழக்கு: ABIL குரூப் சேர்மனை கைது செய்தது சிபிஐ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.