ஒரே நாளில் ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் லாபம்.. கொண்டாட்டத்தில் முதலீட்டாளர்கள்..!

இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது. இது சில சாதகமான சர்வதேச காரணிகளுக்கு மத்தியில் ஏற்றம் கண்டுள்ளது.

சென்செக்ஸ் 1041.08 புள்ளிகள் அல்லது 1.90% ஏற்றம் கண்டு, 55,925.74 புள்ளிகளாக வர்த்தகமாகி முடிவடைந்தூள்ளது. இதே நிஃப்டி 308.95 புள்ளிகள் அல்லது 1.89% ஏற்றம் கண்டு, 16,661.40 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எம் & எம், இன்ஃபோசிஸ், லார்சன் & டூப்ரோ, டெக் மகேந்திரா, ஹெச் சி எல் டெக்னாலஜி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளது. இந்த பங்குகள் 4.94% வரையில் ஏற்றம் கண்டுள்ளது.

நஷ்டம் ரூ.112, டிவிடெண்ட் ரூ.1.50 தானா? எல்.ஐ.சி முதலீட்டாளர்கள் அதிருப்தி

அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

இதே கோடக் மகேந்திரா வங்கி, சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி உள்ளிட்ட பங்குகள் சென்செக்ஸ் டாப் லூசர்களாக உள்ளது. இவைகள் 2.23% வரையில் சரிவினைக் கண்டுள்ளது.

தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று 1943.10 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்று வெளியேறியுள்ளனர். இந்த போக்கு இனியும் தொடரலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ரூ.5.34 லட்சம் கோடி வருவாய்

ரூ.5.34 லட்சம் கோடி வருவாய்

இதற்கிடையில் பி எஸ் இ-யில் பட்டியலிடப்பட்ட பங்குகள் 5.34 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனம் அதிகரித்து, 258.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 253.13 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

3 நாளில் ரூ.10.19 லட்சம் கோடி
 

3 நாளில் ரூ.10.19 லட்சம் கோடி

கடந்த 3 அமர்வுகளாகவே தொடர்ந்து சந்தையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், முதலீட்டாளர்கள் சொத்து மதிப்பு 10.19 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று அமர்வுகளில் சந்தையானது 4% அல்லது 2176.48 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் பி எஸ் இ-யில் உள்ள பங்குகள் 10.19 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 2,58,47,092.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

நல்ல ஏற்றத்தில் இன்டெக்ஸ்

நல்ல ஏற்றத்தில் இன்டெக்ஸ்

சந்தையில் ஐடி மற்றும் ஆட்டோ துறை, பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட சில துறைகள் 2% வரையில் ஏற்றம் கண்டுள்ளது. டாலர் மதிப்பு சரிவு, பருவ மழை முன் கூட்டியே தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக அமர்வில் மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குகள் 2% வரையில் ஏற்றம் கண்டுள்ளது. ரியால்டி பங்குகளில் நல்ல ஏற்றத்தினை கண்டுள்ளன.

நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

இந்தியாவின் பெஞ்ச் மார்க் குறியீடுகள் உச்சத்தினை எட்டிய நிலையில், கச்சா எண்ணெய் விலையானது கிட்டதட்ட 120 டாலர்களுக்கு அருகில் வர்த்தகமாகி வருகின்றது. இது பணவீக்கத்தினை அதிகரிக்க தூண்டலாம். எண்ணெய் விலையானது 2 மாதத்தில் இல்லாத அளவுக்கு உச்சம் எட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

investor richer by over Rs.5 lakh crore as sensex soars 1041 points

The market capitalization of BSE-listed companies increased by Rs 5.34 lakh crore to Rs 258.47 lakh crore. It was Rs 253.13 lakh crore in the last session.

Story first published: Monday, May 30, 2022, 20:23 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.