வயதை எதிர்த்து போராடுகிறேன்: ராதிகா ஆப்தே

மும்பை: வயதாகிக் கொண்டே செல்கிறது. அதை எதிர்த்துதான் போராடுகிறேன் என்றார் ராதிகா ஆப்தே.தமிழில் ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. அவர் கூறியது:விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறேன். வயதாக ஆக, முகப்பொலிவு இழப்பது வாடிக்கைதான். ஆனால் அதுதான் எனக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. எனக்கு தெரிந்து பாலிவுட்டில் உள்ள பலர், அழகுக்காக ஆபரேஷன் செய்துகொள்கிறார்கள். இதுபோல் முகத்திலும் உடலிலும் ஆபரேஷன் செய்த பலரை எனக்கு தெரியும். ஆனால் அதுபோல் செயற்கை அழகை பராமரிக்க நான் விரும்பவில்லை. அதற்கு பதிலாக வயதோடு போராடுவதே நல்லது என நினைக்கிறேன். சினிமாவுக்குள் வந்த ஆரம்பத்தில் எனது பொருளாதார சூழல் மோசமாக இருந்தது. மாதம் வெறும் 10 ஆயிரம் ரூபாய்தான் சம்பாதிப்பேன். அதை வைத்து காலம் கழித்து வந்ததை மறக்க முடியவில்லை. இப்போது பிரபலமான பிறகும் பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில்தான் இருக்கிறேன். அந்த அளவுக்கு போட்டி நிறைந்ததாக பட உலகம் மாறியிருக்கிறது. இவ்வாறு ராதிகா ஆப்தே கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.