"தெலுங்கில் அதிக படங்கள் கிடைக்க இந்தச் சம்பவம்தான் காரணம்!"- மனம் திறக்கும் வித்யுலேகா

இப்போது குக் வித் கோமாளியில் கலக்கி வரும் வித்யுலேகா, தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். தமிழ் சினிமாவில் பெண் காமெடி நடிகைகள் மனோரமா, கோவை சரளாவின் வரிசையில் இடம்பிடிக்கக் காத்திருப்பவர். வித்யுவிடம் ஒரு குட்டி சாட்.

வித்யுலேகா

தொடர்ந்து தெலுங்குல நடிச்சதுல தெலுங்கும் நல்லா கத்துக்கிட்டீங்க போலிருக்கே?

”ஆமாங்க. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ தெலுங்கு வெர்ஷனிலும் நான்தான் நடிச்சிருந்தேன். என் கேரக்டருக்கு நான்தான் டப் பண்ணனும்னு கௌதம் சார் சொன்னதும் எனக்கு பயம் வந்திடுச்சு. தமிழ்லேயே முக்கி முக்கித்தான் பேசினேன். தெலுங்கும் தெரியாது. ‘நான் எப்படி சார் பேசுவேன்’ன்னு கேட்டேன். டப் பண்ணும் போது தெலுங்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தரையும் உதவிக்கு வச்சிருந்தாங்க. தெலுங்கில் டப்பிங் முயற்சி பண்ணினேன். அது சூப்பர் டூப்பர் ஹிட் ஆச்சு. இந்த டப்பிங் பார்த்துட்டுத்தான் நிறைய இயக்குநர்கள் தெலுங்கில் கூப்பிட ஆரம்பிச்சாங்க. அவங்களோட முதல் கண்டிஷனே, ‘நீங்கதான் டப்பிங் பேசணும்’னு சொல்லிடுவாங்க. இப்ப தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழியிலும் சொந்தக் குரல்ல பேசிடுறேன். இதுக்கு கௌதம்சார்தான் காரணம்.”

வித்யுலேகா

படப்பிடிப்புக்கு உங்களோட துணைக்கு யார் வருவாங்க..?

“யாரும் வரமாட்டாங்க. எங்க வீட்டுல அவ்ளோ சுதந்திரம் கொடுத்திருக்காங்க. அதைவிட என் மேல நம்பிக்கை வச்சிருக்காங்க. அந்த நம்பிக்கை இருந்தாலே போதும். ஒரு பொண்ணுக்கு சுதந்திரம் தானா வந்திடும். ஒருநாள் எங்க அப்பாகிட்ட கேட்டேன். ‘ஏம்ப்பா நான் உன்னோட பொண்ணுதானே… என் மேல நம்பிக்கை இருக்குதுல்ல’னு கேட்டேன். அன்னைக்கு இருந்து அப்பா என்கிட்ட ஒருகேள்விக்கூட கேட்டதில்ல. ஏன் இதைப் பண்ணினே? எதுக்காக இதைப் பண்ணினேன்னு கேட்டதில்லை. அம்மா, அப்பாவா இருந்தாலும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும். அவங்க வேலையைவிட்டுட்டு என்னோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரச் சொல்றது சரியா இருக்காது. எனக்கு உடம்புல ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணினபோது என் துணைக்கு எங்க அம்மா சில நாள்கள் வந்திருந்தாங்க. அப்ப அவங்களுக்கு எவ்ளோ அலைச்சலா இருந்திருக்கும்னு எனக்கு மட்டும்தான் தெரியும்.”

வித்யுலேகா

“திடீர்னு ஸ்லிம்மா ஆனீங்க… அது எப்படிச் சாத்தியமாச்சு?”

“2019ல குடும்பத்தோட கொடைக்கானல் போயிருந்தோம். அங்கே ஒரு சின்ன மலை மேல ட்ரெக்கிங் போயிருந்தோம். அவ்ளோதான் எனக்கு மூட்டுவலி, முதுகுவலினு மூச்சு வாங்கிடுச்சு. வயதானவங்ககூட என் முன்னாடி எளிதா மலையேறினாங்க. அப்பத்தான் தோணுச்சு. ஹெல்த்தை விட்டுட்டோமேன்னு நினைச்சேன். ஆரோக்கியமா இருக்கறதுதான் சொத்துன்னு புரிஞ்சுக்கிட்டேன். முன்னாடி எல்லாம் என்கிட்ட ‘நீ ஜிம்முக்கு போ’னு யாராவது அடிக்கடி சொல்லும் போதெல்லாம் எனக்கு எரிச்சலா இருக்கும். ஒரு ஆயுர்வேத சிகிச்சையோடு முதல்கட்டமா உடல் எடையை குறைக்க முயற்சி பண்ணினேன். அதன்பிறகு அரிசி, மாவு, சர்க்கரைனு வெள்ளையான உணவுகளைத் தவிர்க்க ஆரம்பிச்சேன். நான் அசைவ உணவுகளை நிறைய எடுத்துக்கிட்டேன். ரிவர்ஸ் பிளேட்டிங் டயட் முறையை எடுத்துக்கிட்டேன். இன்னும் தெரிஞ்சுக்க இந்த வீடியோவை பாருங்க…”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.