கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல்-இ நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது.இந்த தடுப்பூசி 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது.

latest tamil news

இந்த நிலையில், கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் பூஸ்டர் டோசாக செலுத்திக்கொள்ள டிசிஜிஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.